• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Coco Cola vs Ronaldo: பெவிக்காலின் அட்டகாச விளம்பரம்..!

Coco Cola vs Ronaldo: பெவிக்காலின் அட்டகாச விளம்பரம்..!

ரொனால்டோ

ரொனால்டோ

மார்க்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூழலை பெவிக்கால் நிறுவனமும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

  • Share this:
யூரோ கால்பந்து தொடர் களைகட்டி வரும் நிலையில், போர்ச்சுக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். ஹங்கேரி அணியுடனான போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில், அவரது மேஜை மீது இரண்டு கோகோ கோலா பாட்டில்களும், ஒரு தண்ணீர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ரொனால்டோ சிறிதும் தாமதிக்காமல் அந்த இரண்டு பாட்டில்களையும் மறைவாக நகர்த்தி வைத்தார். மேலும், தண்ணீரை பருகுமாறு தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்திக் காட்டினார்.

ரொனால்டோவின் இந்த ஒற்றைச் செயல் உலகளவில் எதிரொலித்தது. கோகோ கோலா நிறுவனத்தின் வர்த்தகத்திலும் பெரும் சரிவை ஏற்படுத்தியது. ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு முன் 242 பில்லியனாக இருந்த கோகோ கோலா நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு, ஒரே நாளில் 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சரிந்தது. அதாவது 238 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. செயற்கை பானங்கள் உடலுக்கு தீமை விளைவிப்பவை, தண்ணீர் மட்டுமே உடலுக்கு நல்லது என்ற பொருளில் ரொனால்டோ இதனை செய்திருப்பதாக செய்திகள் பறக்கத் தொடங்கின. இணைய உலகில் மீம்ஸ்கள் கொடி கட்டிப் பறந்தன.

Also Read:   இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்

வடிவேல் - சத்யராஜ் காமெடி சீனை நினைவு படுத்தும் விதமாக ‘உன்னை கூப்பிடதுக்கு, என்ன பண்ணணுமோ, அத சரியா பண்ணிட்ட’ என்ற மீம்ஸ் ரொனால்டோவையும், கோகோ கோலா நிறுவனத்துக்கும் பொருத்தி நெட்டிசன்கள் பரப்பினர்.

Also Read:   PhonePe யூசர்கள் இனி யுபிஐ வழியாக வாலட்டை ஆட்டோ டாப்-அப் செய்யலாம்!

மார்க்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூழலை பெவிக்கால் நிறுவனமும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

https://twitter.com/hvgoenka/status/1405511829372080130?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1405511829372080130%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Ffevicol-advertisement-cristiano-ronaldo-coca-cola-euro-2020-marketing-twitter-reactions-3861692.html

அந்த விளம்பரத்தில், "பாட்டிலை நகர்த்தி விட்டீர்கள், பெவிக்காலை பயன்படுத்தியிருந்தால் பாட்டிலும் நகர்ந்திருக்காது, மதிப்பும் குறைந்திருக்காது" என தெரிவித்துள்ளது. பெவிக்கால் நிறுவனத்தின் சமயோசித்தமான இந்த விளம்பரம் அந்த நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. இணையவாசிகள் மட்டுமல்லாது பெரு நிறுவனங்களின் தலைவர்களும், மார்க்கெட்டில் இருக்கும் கள சூழலை சரியாக புரிந்து கொண்டு அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெவிக்கால் நிறுவனத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெவிக்கால் நிறுவனம் இதுபோன்ற விளம்பரங்களை இப்போது மட்டுமல்ல, எப்போதெல்லாம் ஒரு விஷயம் உலகளவில் பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விளம்பரத்தை உருவாக்கி வருகின்றனர். மெசேஜ் தளத்தில் வளர்ந்து வந்த ஸ்நாப் சாட் நிறுவனமும், கோகோ கோலா நிறுவனம் எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலை 2018 ஆம் ஆண்டு எதிர்கொண்டது. ரியாலிட்டி ஸ்டாரான கைலி ஜென்னர், ஸ்நாப் சாட் மெசேஜ் செயலியை தான் பயன்படுத்துவதில்லை என அவர் கூறியதும், அந்த செயலியின் மார்க்கெட் மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: