ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்: பி.வி. சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி!

வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்: பி.வி. சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி!

பிரதமர் கலந்துரையாடல்

பிரதமர் கலந்துரையாடல்

கடுமையாக உழையுங்கள், நிச்சயம் மீண்டும்  வெற்றி பெறுவீர்கள்’ என்று வாழ்த்திய மோடி, ‘நீங்கள் வெற்றிபெற்ற பின்னர் நான் உங்களை சந்திக்கும்போது, இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்’ என்று பி.வி.சிந்துவிடம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் இந்தியா சார்பில் 126 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.  இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர்மோடி இன்று கலந்துரையாடினார்.  அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் கலந்துரையாடிய மோடி, ’பாரிஸில் உங்களுடைய வெற்றி தடத்துக்கு பின்னர், நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது’ என்று பாராட்டினார்.

குத்துசண்டை வீராங்கனை மேரிகோமிடம் உங்களுக்கு பிடித்த குத்துசண்டை வீரர்  யார் என மோடி வினாவினார். அதற்கு, முகமது அலியை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை பார்த்து ஊக்கமடைந்து குத்துசண்டை போட்டியை தேர்வு செய்ததாக மேரி கோம் பதிலளித்தார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு நடுவராக முதன்முறையாக இந்தியர் தேர்வு!

இதேபோல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிடம் பேசிய மோடி,  உங்கள் பயிற்சியாளர் தற்போது ஐஸ்கிரீம சாப்பிட உங்களை அனுமதிக்கிறாரா என நகைச்சுவையாக கேட்டார்.

அதற்கு, ’ தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் உணவு விசயத்தில் கட்டுப்பாடாக இருப்பதாகவும்  அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதில்லை என்றும்  பி.வி. சிந்து தெரிவித்தார்.

மேலும் படிக்க: நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் - பால் போக்பா

அப்போது,  ‘கடுமையாக உழையுங்கள், நிச்சயம் மீண்டும்  வெற்றி பெறுவீர்கள்’ என்று வாழ்த்திய மோடி, ‘நீங்கள் வெற்றிபெற்ற பின்னர் நான் உங்களை சந்திக்கும்போது, இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்’ என்று தெரிவித்தார்.

இதேபோல், மேலும் பல்வேறு வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மோடி பேசினார்.

Published by:Murugesh M
First published:

Tags: Narendra Modi, P.V.Sindhu, Tokyo Olympics