முகப்பு /செய்தி /விளையாட்டு / 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு மென்பொருள் தயாரிக்கும் சென்னை ஐஐடி

2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு மென்பொருள் தயாரிக்கும் சென்னை ஐஐடி

குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai, India

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

சென்னை ஐஐடி-ல் உள்ள  விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது,  குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) நிறுவனத்தில் சென்னை ஐஐடி இணைந்து பணியாற்றி வருகிறது.

இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " விளையாட்டுப் பொறியியல் (Sports Engineering) என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர் இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள்,  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க:  'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) குத்துச்சண்டைப் பிரிவில் இளைஞர் மேம்பாட்டுத் தலைவரான ஜான் வார்பர்டன் கூறும்போது, "குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும். வீரர்களின் பலம் என்னென்ன? செயல்பாட்டு நிலைகள், பஞ்ச்-கள், தற்காப்புத் திறமைகள் ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் எவை எவை? ஆகியவற்றை தொழில்நுட்பம், தந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்களால் எடுத்துரைக்க முடியும். பயிற்சிப் புள்ளிகளைக் கண்டறியவும், வீரர்கள் குறித்த கூர்நோக்குகளை விளக்கவும் ஏதுவாக, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அமைப்பின் திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கஎம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் LGBTIQA+ மக்களை உள்ளடக்கிய பாடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம்

top videos

    ஐஐடி மெட்ராஸ்-ன் ரசாயனப் பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, "பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும்" எனக் குறிப்பிட்டார்.

    First published:

    Tags: Chennai IIT, IIT Madras, Olympic 2024