Home /News /sports /

1983 உலகக்கோப்பை போன்ற வெற்றி- தாமஸ் கோப்பை வரலாற்று வெற்றி குறித்து சுனில் கவாஸ்கர்

1983 உலகக்கோப்பை போன்ற வெற்றி- தாமஸ் கோப்பை வரலாற்று வெற்றி குறித்து சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

மே-15ம் தேதி இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு மட்டுமல்ல கிரிக்கெட்டையும் தாண்டி இந்தியக் கொடி பல விளையாட்டுக்களிலும் பறக்க வேண்டும் என்று மனதார விரும்பும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கும் மிக முக்கியமான தினம். ஏனெனில் முதன் முதலாக மதிப்பு மிக்க தாமஸ் கோப்பையை இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி வென்ற தினமாகும்.

இறுதிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியன்களான இந்தோனேசியாவை இந்திய ஆடவர் அணி வென்று முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. 1983 உலகக்கோப்பையை விடவும் பெரியது, ஏனெனில் மிகவும் கடினமானது.

கவாஸ்கர் வெறும் கிரிக்கெட் பிரியர் மட்டுமல்ல, அவர் ஹாக்கி, பேட்மிண்டன், டென்னிஸ் என்று அனைத்து விளையாட்டுகளிலும் அவர் காலத்திலேயே நண்பர்களைக் கொண்டவர். பெரிய ஜீனியஸ் பிளேயரகா இருந்தாலும் அவர் மற்ற விளையாட்டுக்களின் ரசிகர் என்பதையும் நாம் மறக்கலாகாது.

அவர் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணியின் வரலாற்று திருப்பு முனையான தாமஸ் கோப்பை வெற்றியை ‘1983 உலகக்கொப்பை தருணம்’ என்று நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து பேசியுள்ளார்.

அன்று எப்படி நாங்கள் 1983 உலகக்கோப்பையை வென்ற உடன் இருந்தோமோ அதே மனநிலையில்தான் இப்போதும் தாமஸ் கோப்பை வெற்றியிலும் இருக்கிறோம்.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி


கவாஸ்கர் கூறும்போது, “காலை ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மரணத்துடன் துயரமான செய்தி நெஞ்சை உலுக்க, மதியம் செல்லச் செல்ல நல்ல செய்தி வரத் தொடங்கியது. தாமஸ் கோப்பையை வென்றோம் என்ற செய்திதான் அது, அதுவும் 14 முறை சாம்பியன்களான இந்தோனேசியாவை வீழ்த்தி கோப்பை என்றால் உலகக்கோப்பையை வென்ற வரலாற்றுத் தருணம்தான் இதுவும்.

நான் உண்மையில் இந்தச் சாதனையினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பேட்மிண்டன் என்றால் உயிர். டி20 கிரிக்கெட்டா, அல்லது பேட்மிண்டனா? எதைப் பார்க்க முன்னுரிமை அளிப்பீர்கள் என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் பேட்மிண்டனுக்குத்தான் என் முன்னுரிமை.

இந்திய பேட்மிண்டனுக்கு மிக பிரமாதமான தினம். கிரிக்கெட்டில் 1983 உலகக்கோப்பை தருணம் போன்றது. 1983-ல் இந்தியா வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் பேட்மிண்டனைப் பொறுத்தவரை இந்தியா கடந்த 2 ஆண்டுகளாக அற்புதமாகத் திகழ்கிறது. ஆனால் இங்கு என்னவெனில் 14 முறை சாம்பியன் ஆன அணியை வென்றுள்ளனர். வெல்டன்.

 
Published by:Muthukumar
First published:

Tags: Badminton

அடுத்த செய்தி