Home /News /sports /

இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் - ஹாங்காங் செஸ் வீராங்கனை

இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் - ஹாங்காங் செஸ் வீராங்கனை

ஹாங்காங் விராங்கனை சிகப்பி மற்றும் குடும்பத்தினர்.

ஹாங்காங் விராங்கனை சிகப்பி மற்றும் குடும்பத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று தினமும் பிரார்த்திக்கிறேன் என ஹாங்காங் செஸ் வீராங்கனையும் இந்தியாவில் பிறந்தவருமான சிகப்பி தெரிவித்துள்ளார்.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது இதில் இந்தியா சார்பில் 30 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்திய பிறந்து ஹாங்காங்கில் குடியேறிய சிகப்பி மற்றும் அவரது மகன் ஹாங்காங் அணிக்காக ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று உள்ளனர்.

    சிகப்பி மற்றும் அவரது மகன் கே. தண்ணீர்மலை தற்போது ஹாங்காங் சார்பாக ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார்.

    இந்த நிலையில் இன்றைய போட்டி முடிந்தவுடன் குடும்பத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது பேசிய சிகப்பி, "நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான். எட்டு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். 2005 குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுவிட்டேன்.

    சிகப்பி மற்றும் குடும்பத்தினரின் ஒலிம்பியாட் அடையாள அட்டை.


    2006 முதல் அங்கு விளையாடத் தொடங்கினேன். அங்குப் பெண்கள் அணி எனத் தனியாக இல்லை, 2016 ஆம் ஆண்டு பெண்கள் அணி உருவாக்கினோம். நமது ஊரில் விளையாடுவது பெருமையாக உள்ளது.

    ஹாங்காங்கில் கொரோனா காரணமாக அதிகளவில் கட்டுப்பாடு உள்ளது. மீண்டும் ஹாங்காங் சென்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் வீட்டிற்குச் செல்ல முடியும். இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை இருந்தது அது இப்போது விளையாட வந்திருப்பதன் மூலமாக நிறைவேறியுள்ளது.

    செஸ் ஒலிம்பிக் போட்டி மிகவும் அருமையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறு வயதில் தேசிய அளவிலான இறுதி போட்டியில் விளையாடினேன்.

    அதற்குப் பிறகு என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு அதிக அளவில் பயிற்சிகளை வழங்கினார்கள். 14 வயதுக்குப் பிறகு பெரிதாக விளையாடவில்லை அதன் பிறகு கல்லூரியில் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடினேன்.

    பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாடும் வீடியோவை நாங்கள் தவறவிட்டதே இல்லை. தமிழக வீரர்கள் தான் எங்களுக்கு எடுத்துக்காட்டு. இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று தினமும் நான் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர்களின் மகன் தண்ணீர்மலை, "சிறுவயது முதல் விளையாடி வருகிறேன், மூன்று நபர்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன், அதில் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் விளையாடுவதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அவர்கள் தான் எனக்குப் பிடித்த வீரராகவும் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி