Home /News /sports /

கடின உழைப்பை விடுத்து என் மதம் பற்றியே பேசுகிறார்கள்: நிகத் ஜரீன் வேதனை

கடின உழைப்பை விடுத்து என் மதம் பற்றியே பேசுகிறார்கள்: நிகத் ஜரீன் வேதனை

நிகத் ஜரீன்

நிகத் ஜரீன்

நான் என் முஸ்லிம் சமுதாயத்தை விட நான் என் நாட்டையே பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்று உலக குத்துச் சண்டை மகளிர் சாம்பியன் நிகத் ஜரீன் அவர் மதம் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    நான் என் முஸ்லிம் சமுதாயத்தை விட நான் என் நாட்டையே பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்று உலக குத்துச் சண்டை மகளிர் சாம்பியன் நிகத் ஜரீன் அவர் மதம் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    ரிங்கில் அவரது சாதனையின் பின்னணியில் உள்ள கடின உழைப்பு, கடும் பயிற்சிகளைப் பேசாமல் அவர் சார்ந்த சமூகம், மதம் பற்றியே அதிகம் பேசப்படுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்புகையில் வெளிப்படையாக பதிலளித்தார் நிகத் ஜரீன்.

    “ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் என் நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்து-முஸ்லிம் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. நான் என் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய வரவில்லை என் நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். நாட்டுக்காக பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    நம் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் திறமை வாய்ந்தவர்கள். நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். எங்களிடம் வலு, வேகம் மற்றும் சக்தி அனைத்தும் உள்ளது. அதாவது உலக அளவுக்கு சென்ற பிறகே, மன அழுத்தத்தை கையாள்வதற்குத்தான் பயிற்சி தேவை.

    பெரிய அரங்கத்துக்குச் செல்லும் போது நிறைய வீரர்கள் பதற்றமடைந்து விடுவார்கள். இதனால் ஆட்டம் பாதிக்கப்படும். வாய்ப்பு கிடைத்தால் நிரூபிக்க நிறைய பேர் இருக்கிறார்கள், நான் நிரூபித்துள்ளேன். உலக சாம்பியன் ஆகி என்னை நிரூபித்துள்ளேன்.

    நான் போராடியிருக்காவிட்டால், மேரி கோம் என் உடல் எடைப்பிரிவில் இல்லாவிட்டால் நான் இத்தனை கடினமாக உழைத்திருக்க மாட்டேன். எனவே நான் கடின உழைப்பை கொடுக்காவிட்டால் இன்று உங்கள் முன்னால் சாம்பியனாக உட்கார்ந்திருக்க மாட்டேன்.

    எனவே நான் கிடைத்த வாய்ப்பு தாமதமானாலும் இன்னும் சாதிக்க இதைத் தூண்டுகோலாக்கி மேலும் சாதிக்க பாடுபடுவேன்” என்றார் நிகத் ஜரீன்.

    இவர் டோக்கியோ ஒலிம்பிக் சோதனை ஆட்டத்தில் மேரிகோமிடம் 1-9 என்று தோற்றார். தோற்றாலும் அவர் தனது ரோல் மாடலான மேரி கோமை கட்டித்தழுவ முனைந்தார், ஆனால் அவரை தள்ளி விட்டார் மேரி கோம்.

    இது குறித்து கூறிய நிகத் ஜரீன், “நான் அந்தத் தருணத்தில் மிக மோசமாக உணர்ந்தேன், என்னுடைய ரோல் மாடல், என் ஆதர்சமான மேரி கோம் அப்படி நடந்து கொண்டார். ஆனால் அந்தத்ட் தருணத்தின் உஷ்ணத்தில் அது நடந்தது என்றே நான் கருதுகிறேன்.

    நான் அதிலிருந்து நகர்ந்து விட்டேன், உலக சாம்பியன் ஆன பிறகு மேரிகோமை சந்தித்தேன் அப்போது அனைத்தும் நல்லபடியாகவே இருந்தது” என்றார் நிகத் ஜரீன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: World Boxing Championship

    அடுத்த செய்தி