Home /News /sports /

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன் - எலான் மஸ்க் அறிவிப்பால் பரபரப்பு

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன் - எலான் மஸ்க் அறிவிப்பால் பரபரப்பு

 எலான் மஸ்க் ட்வீட்

எலான் மஸ்க் ட்வீட்

டெல்சா நிறுவன தலைமைச் செயலதிகாரியான எலான் மஸ்க் புதனன்று விடுத்த அறிவிப்பு டிவிட்டர்வாசிகளை அலறவிட்டுள்ளது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன் என்று அறிவித்தார் எலான் மஸ்க்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    டெல்சா நிறுவன தலைமைச் செயலதிகாரியான எலான் மஸ்க் புதனன்று விடுத்த அறிவிப்பு டிவிட்டர்வாசிகளை அலறவிட்டுள்ளது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன் என்று அறிவித்தார் எலான் மஸ்க்.

    ஒரு ட்வீட்டில் அவர், “மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன்” என்று பதிவிட்டார். இது போன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ட்வீட்களை இடுவது எலான் மஸ்க்கின் வழக்கம், அதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணியை இவர் வாங்குகிறாரா இல்லையா என்பதெல்லாம் தெளிவாக அறிய முடியாத ஒன்று.

    மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தற்போதைய உரிமையாளர்கள் அமெரிக்காவின் கிளேசர் குடும்பத்தினர். அவர்கள் எலான் மஸ்க்கின் அறிவிப்பு பற்றி எந்த ஒரு ரியாக்‌ஷனும் காட்டவில்லை. செவ்வாயன்று பங்குச்சந்தை முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் சந்தை மூலதனம் 2.8 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    மான்செஸ்டர் யுனைடட் அணியின் ரசிகர்கள் கிளேசர் குடும்பத்தினருக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டினர். 2005-ல் இந்தக் குடும்பத்தினர் 955.51 டாலர்களுக்கு வாங்கினர். கிளேசர் குடும்பத்தின் மீது கடும அதிருப்தி எழுந்துள்ள நிலையில்தான் எலான் மஸ்க் இப்படியொரு ட்வீட்டை இட்டுள்ளார்.

    பிரெண்ட்போர்ட் அணியிடம் சமீபமாக 0-4 என்று ஒரு கால்பந்து போட்டியில் உதை வாங்கியதை அடுத்து அந்த அணியின் கேரி நெவில் கிளப் நடத்தப்படும் விதம் குறித்து கடும் தாக்குதல் தொடுத்தார்.

    ஒருகாலத்தில் பிரமாதமாக இருந்த மான்செஸ்டர் யுனைடெட் இப்போது ‘டெட்’ ஆகி கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கின் அறிவிப்பு பரபரப்பாகியுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Elon Musk, Football

    அடுத்த செய்தி