முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதி வரை கடும் சவால் அளித்து பிரனாய் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதி வரை கடும் சவால் அளித்து பிரனாய் தோல்வி

ஹெச்எஸ் பிரணாய் தொல்வி

ஹெச்எஸ் பிரணாய் தொல்வி

செப்டம்பர் 2, வியாழன் அன்று ஜப்பான் ஓபன் 2022ல் இந்தியாவின் ஹெச்எஸ் பிரணாய் போராடி தோல்வியடைந்து வெளியேறினார். இந்த பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் எஞ்சியிருக்கும் ஒரே வீரரான பிரணாய், தைவானின் கூ டியென்-செனிடம் 17-21, 21-15, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inte, Indiajapanjapan

செப்டம்பர் 2, வியாழன் அன்று ஜப்பான் ஓபன் 2022ல் இந்தியாவின் ஹெச்எஸ் பிரணாய்  போராடி தோல்வியடைந்து வெளியேறினார். இந்த பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் எஞ்சியிருக்கும் ஒரே வீரரான பிரணாய், தைவானின் கூ டியென்-செனிடம் 17-21, 21-15, 20-22  என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முக்கியமான காலிறுதி சுற்று ஆட்டத்தில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தைவானின் சவ் தியென் சென் என்பவரை இந்தியாவின் பிரணாய் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், சவ் தியென் சென்னிடம் 17-21, 21-15, 20-22 என்ற செட் கணக்கில் எச்.எஸ்.பிரணாய் தோல்வியடைந்தார்.

இதையும் வாசிக்க: விராட் கோலி சூர்ய குமார் யாதவ் அரைசதம் , ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி

80 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் இறுதி வரை போராடி தோற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டார். முதல் செட்டில் பிரணாய் 11-7 என்று முன்னிலை வகித்தார். ஆனால் தைவான் வீரர் அதன் பிறகு தன் ஆட்டத்தை மாற்றி எழுச்சி கண்டார். இதனையடுத்து புள்ளிகள் தைவான் வீரர் கணக்கில் எகிற முதல் செட்டை 17-21 என்று இழந்தார் பிரணாய்.

2வது செட்டில் தைவான் வீரர் சென் முன்னணியில் இருந்தார், ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பிரணாய் பிரமாதமான ஆட்டத்தை தன் சர்வ், வாலி, ஸ்மேஷ்கள் மூலம் ஆடி 11-11 என்று அவரை எட்டிப்பிடித்தார். அதன் பிறகு நீண்ட ராலிகளில் தன் கைவரிசையைக் காட்டி பிரணாய் 2வது செட்டை 21-15 என்று கைப்பற்றி 1-1 என்று சமன் செய்தார்.

3வது செட் மேலும் பரபரப்பான நிலையில் தொடங்கியது. ஆனால் தைவான் வீரர் சென் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி 11-5 என்று முன்னிலை பெற்று விட்டார். ஆனால் பிரணாய் போராடினார் விடவில்லை. 20 புள்ளிகள் வரை வந்து தைவான் வீரருக்கு இறுதி வரை சவால் அளித்தார், ஆனால் சிலபல தான் காரணமில்லாத தவறுகளினால் பிரணாய் தோற்றார்.

First published:

Tags: Badminton, Japan