ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிஃபா உலகக் கோப்பை தொடரை தமிழ் வர்ணனையோடு நேரலையில் பார்ப்பது எப்படி?

பிஃபா உலகக் கோப்பை தொடரை தமிழ் வர்ணனையோடு நேரலையில் பார்ப்பது எப்படி?

ஃபிஃபா உலக கோப்பை

ஃபிஃபா உலக கோப்பை

FIFA World Cup 2022 | இந்தியாவில் உலகக் கோப்பை 2022 தொடரை டிவியில் எந்த சேனலில் மற்றும் ஆன்லைனில் எங்கு பார்ப்பது என்று பலருக்கும் குழப்பம் நிலவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்து கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு மேல் வீரர்களின் கால்களில் பந்து உதைபடுகின்றது என்பது உலகமறிந்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் 1930-ம் ஆண்டு உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது. அப்போதிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது.

    நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தொடக்க போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவேடார் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈகுவேடார் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகிறது. சாம்பியன் பட்டத்தை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கோடி கணக்கான ரசிகர்களிடையே உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் உலகக் கோப்பை 2022 தொடரை டிவியில் எந்த சேனலில் மற்றும் ஆன்லைனில் எங்கு பார்ப்பது என்று பலருக்கும் குழப்பம் நிலவி வருகிறது. FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்போர்ட்ஸ்18 எச்டி டிவி சேனல்களில் நேரடியாக கண்டு மகிழலாம்.

    ஜியோ சினிமா செயலியிலும் www.jiocinema.com/sports என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கண்டு மகிழலாம். மேலும் ஜியோ சினிமாவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளின் வர்ணனையோடு பார்க்க முடியும்.

    Published by:Vijay R
    First published:

    Tags: FIFA, FIFA World Cup 2022