முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை நடந்த மைதானத்தில் 4 தேசிய போட்டிகள் நடைபெறும்… ஹாக்கி இந்தியா அறிவிப்பு

உலகக்கோப்பை நடந்த மைதானத்தில் 4 தேசிய போட்டிகள் நடைபெறும்… ஹாக்கி இந்தியா அறிவிப்பு

ரூர்கேலா மைதானம்

ரூர்கேலா மைதானம்

ஆண்கள் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் மே 3ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய அளவிலான 4 ஹாக்கி தொடர்கள் ஒடிசா மாநிலம் ரூர்கேலா மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் ரூர்கேலா மைதானங்களில் நடத்தப்பட்டது. புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானம் உலகத்தரம் வாய்ந்த நிலையில், ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானம் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்களும் பிரம்மிக்கும் வகையில் உலகக்கோப்பை ஹாக்கி தொடரை ஒடிசா மாநிலம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக பாராட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரூர்கேலா மைதானத்தில் தேசிய அளவிலான 4 போட்டித் தொடர்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் தேசிய ஜூனியர் மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் ஏப்ரல் 13-ல் தொடங்கி 23ஆம் தேதி வரையிலும், தேசிய ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் தொடர் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 8ஆம் தேதி வரையிலும், சப் ஜூனியர் மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் மே 13-இல் தொடங்கி மே 23-ஆம்தேதி வரையிலும், சப் ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் மே 28-இல் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த மைதானத்தில் ஆடும் அனுபவத்தை, வீரர்கள் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று ஆண்கள் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் மே 3ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை மதுரையிலும் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Hockey