இனி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்க எந்த அணியும் இல்லை என்று உறுதியாக கூற முடியாது என்று சொல்கிறார் கேட் கிராஸ்.
மும்பை 10 மார்ச் 2023: நேற்று (வியாழன்) மாலை மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக் (WPL)இன் புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இரு அணிகளும் எதிர்கொண்டனர். மும்பை இந்தியன்ஸ் அணியினர் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 106 ரன்கள் இலக்கை நிர்ணயித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டில்லி கேப்பிட்டல்ஸ் அணி 105 ரன்களில் ஆல் அவுட்டானார்கள். சாய்கா இஷாக், இஸ்ஸி வோங் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பை இந்தியன்ஸ்-ன் தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்திகா பாட்டியா 32 பந்துகளில் 41 ரன்களும், மேத்யூஸ் 31 பந்துகளில் 32 ரன்களும், மொத்தமாக இருவரின் கூட்டணியில் 65 ரன்கள் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தனர்.
சாய்கா இஷாக் அவர் விளையாடிய மூன்று ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து ஊதா நிற தொப்பியை தொடர்ந்து கைப்பற்றியுள்ளார். ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோ சினிமாவின் மகளிர் பிரிமியர் லீக் (WPL) நிபுணரான கேட் கிராஸ், நடைபெற்ற ஆட்டத்தில் இஷாக்கின் விளையாட்டு திறமையை கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டு அவரது விளையாட்டு யுக்தியை பாராட்டினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "இஷாக் தனது அணியினரான ஹேலி மேத்யூஸை விட இப்போது கணிசமாக முன்னிலையில் உள்ளார். ஸ்டம்ப்-டு-ஸ்டம், பந்து வீசும் கோணங்களை அடிக்கடி கணிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது போன்ற பல திறமைகளை இன்றும் வெளிப்படுத்திவருகிறார். தொடர்ந்து அந்த ஊதா நிற தொப்பியை கழற்ற அவருக்கு மனமில்லை என்று நினைக்கிறேன்.
மேலும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்க்கு தன்னுடைய அணியில் பந்து வீசுவதற்கு இதுபோன்ற வீரர்கள் இருப்பது அவருக்கு ஒரு பெரிய பலம். ஏனென்றால் இஷாக் அவரது வாழ்வில் இந்த மகளிர் பிரிமியர் லீக்கின் மூலம் மிகப் பெரிய திருப்புமுனையை காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் இப்போது வெற்றி கோப்பையை வெல்ல தகுதியான போட்டியாளர்களாக அவர் இருப்பதாகவும் கிராஸ் தெரிவித்தார். “மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஒவ்வொரு அடுத்தடுத்த ஆட்டத்திலும் மேலும் மேலும் முற்றிலும் வலிமையானவர்களாக முன்னேறி வருகிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் சில கேட்சுகளை தவறிவிட்டது தவிர நேற்றிரவு மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இனி வரும் ஆட்டத்தில் எந்த அணியால் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்க முடியும் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார்”
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் இந்த மாபெரும் வெற்றி குறித்து டில்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர் கூறியதாவது, “மும்பை அணி வெற்றி பெற்ற ரன்கள் வித்தியாசத்தில் மூன்று ஆட்டங்களை வெல்வதற்கு, ஹர்மன் ப்ரீத் மிகவும் உறுதியாக இருக்கிறார். அடுத்தடுத்து அவர் ஆட்டத்தில் ஸ்மார்டாக செயல்பட்டு வருகிறார்.
மும்பை பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு, குறிப்பாக வோங், இஷாக் இருவரின் பந்துவீச்சு முற்றிலும் நேர்த்தியாக திறமையுடனும் விளையாடினர். அவர்கள் இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்த கேப்டனாக அவர் பெரிதும் உதவியாக இருந்தார். அவர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தது அவர்களின் அணிக்கு மேலும் ஒரு போனஸ்," என்று கிராஸ் கூறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு UP வாரியார்ஸுடன் மோதுகிறது. மகளிர் பிரிமியர் லீக் விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஆட்டத்தை கலர்ஸ் தமிழ், ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18, ஸ்போர்ட்ஸ்18 கேள், கலர்ஸ் கன்னடா சினிமா போன்றவற்றில் கண்டு மகிழுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket