வெண்கலம் வெல்லா விட்டாலும் உள்ளங்களை வென்றீர்கள்: மகளிர் ஹாக்கி அணிக்கு சக் தே இந்தியா ஹீரோ ஷாரூக் கான் ஊக்கம்

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஆறுதல் கூறும் சக் தே இந்தியா ஹீரோ

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் வெண்கல வாய்ப்பு பறிபோனாலும் இந்தியாவையே தலை நிமிரச் செய்தீர்கள் என்று சக் தே இந்தியா ஹீரோ ஷாரூக்கான் இந்திய அணிக்கு ஊக்கமளித்துள்ளார். 

 • Share this:
  இன்று டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பிளே ஆஃப், வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி தழுவி பதக்க வாய்ப்பை இழந்தது.

  தொடக்கத்தில் 0-2 என்று பின் தங்கியிருந்த இந்திய அணி பிறகு எழுச்சியுற்று 3-1 என்று முன்னிலை பெற்றிருந்த நிலையில் கடைசியில் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.  சக் தே இந்தியா என்ற பாலிவுட் மெகா ஹிட் ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலை மிஸ் செய்த ஷாரூக்கான் பல அவதூறுகளைச் சந்திக்கிறார், பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராகி இந்திய மகளிர் ஹாக்கி அணி உலகக்கோப்பையை வெல்வதுதான் கதை.  சக் தே இந்தியா படம் இந்திய ஹாக்கி உணர்வுகளை தட்டி எழுப்பிய படம், இன்று இந்திய மகளிர் அணி போராட்டக்குணத்தை வெளிப்படுத்தியது உண்மையான சக் தே இந்தியாதான்.

  இதையும் பாருங்க: வெண்கல பதக்கப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி

  இந்நிலையில் சக் தே இந்தியா ஹீரோ ஷாரூக் கான் தோல்வி குறித்துக் கூறும்போது, “மனம் உடைந்தது! ஆனாலும் நாம் தலைநிமிர்ந்து நிற்க அனைத்து காரணங்களும் உள்ளன. வெல் பிளேய்ட் பெண்கள் ஹாக்கி அணி. இந்தியாவில் அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளீர்கள், கிரியா ஊக்கியாக இருக்கிறீர்கள். இதுவே ஒரு வெற்றிதான்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: