இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திடீர் நீக்கம்!

ஹரேந்திர சிங், கடந்த 6 ஆண்டுகளில் 6 முறை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

news18
Updated: January 10, 2019, 12:47 PM IST
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திடீர் நீக்கம்!
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங். (Twitter)
news18
Updated: January 10, 2019, 12:47 PM IST
இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் 25-வது தலைமைப் பயிற்சியாளராக, கடந்த ஆண்டு மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். அவரது பயிற்சியின்கீழ் இந்திய ஹாக்கி அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என புகார் எழுந்தது.

harendra singh, ஹரேந்திர சிங்.
இந்திய ஹாக்கி அணி உடன் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங். (Twitter)


நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி, இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்றது. அதேபோல், ஒடிசாவில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில், லீக் சுற்றுகள் முடிவில் இந்திய அணி இடம்பெற்ற பிரிவில் முதல் இடத்தில் இருந்தது.

கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் செயல்திறன் மற்றும் மேம்பாட்டுக்குழு ஆலோசனை நடத்தியது. கூட்டத்தின் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.

harendra singh, ஹரேந்திர சிங்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங். (Twitter)


ஹரேந்திர சிங், கடந்த 6 ஆண்டுகளில் 6 முறை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது பயிற்சியின்கீழ் ஜூனியர் அணி 2016-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதனால், மீண்டும் அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.
Loading...
புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை, செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியலோ ஆகியோரின் மேற்பார்வையில் இந்திய அணி செயல்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

Photos: சிட்னியில் வலைப் பயிற்சியை தொடங்கினார் தோனி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...