உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

World Cup winner #GordonBanks, dies aged 81 | பிபா சார்பில் 6 முறை சிறந்த கோல் கீப்பருக்கான விருதை கோர்டன் பாங்ஸ் வென்றுள்ளார்.

Web Desk | news18
Updated: February 12, 2019, 8:29 PM IST
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
கோர்டன் பாங்ஸ். (Twitter)
Web Desk | news18
Updated: February 12, 2019, 8:29 PM IST
உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரரான கோர்டன் பாங்ஸ் தனது 81-வது வயதில் காலமானார்.

1966-ம் ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் கோர்டன் பாங்ஸ். அன்றைய காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த கோல் கீப்பராக பாங்ஸ் வலம் வந்தார்.

பிபா சார்பில் 6 முறை சிறந்த கோல் கீப்பருக்கான விருதை கோர்டன் பாங்ஸ் வென்றுள்ளார். இங்கிலாந்து தேசிய அணிக்காக 1963-1972 வரை 73 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 1972-ல் நடந்த கார் விபத்தில் தனது வலது கண்ணின் பார்வையை பறிகொடுத்தார். அதன்பிறகும், பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

Gordon Banks, கோர்டன் பாங்ஸ்
இங்கிலாந்து கால்பந்து அணியில் கோர்டன் பாங்ஸ்.(Twitter)


சமீப காலமாக புற்று நோயின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பாங்ஸ், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார். பாங்ஸ் இறக்கும்போது அவரது மனைவியான உர்சுலா உடனிருந்துள்ளார்.

Gordon Banks, கோர்டன் பாங்ஸ்
உலகக்கோப்பை கையில் ஏந்திய மகிழ்ச்சியில் கோர்டன் பாங்ஸ். (Twitter)


கோர்டன் பாங்ஸின் மறைவால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவரது மறைவிற்கு பல்வேறு நாட்டு கால்பந்து அணிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
Loading...
சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் மரணமா? வெளியானது உண்மை நிலவரம்!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...