• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Neeraj Chopra | நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்: சுதந்திரத்துக்கு பின் தங்கம் வெல்லும் முதல் இந்தியர்!

Neeraj Chopra | நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்: சுதந்திரத்துக்கு பின் தங்கம் வெல்லும் முதல் இந்தியர்!

neeraj chopra

neeraj chopra

சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

  • Share this:
டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்க கனவை நனவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா (வயது 23). ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

பரபரப்பான இறுதிப் போட்டி:

நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்று போட்டிகளில் 86.65 மீட்டர் வீசி நேரடியாக இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா. அதாவது காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் அவர் கலந்து கொள்ளாமல் நேரடியாகவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

Also Read:  Neeraj Chopra | தங்கப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.. டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் சாதனை!

பரபரப்பான இறுதிச் சுற்று போட்டி இன்று மாலை நடந்தது. இதில் ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர். நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டரும், மூன்றாம் சுற்றில் 76.79 மீட்டரும் ஈட்டி வீசினார்.



இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீ, அவருக்கு தங்கப்பதக்கத்துக்கான முன்னிலையை பெற்றுத்தந்தது. இதன் பின்னர் அனைவரின் கவனமும் நீரஜ் சோப்ரா மீதே இருந்தது. இறுதிப் போட்டியில் எந்த நாட்டின் வீரரும் 86 மீட்டர் கூட வீசவில்லை.

சவால் தந்த வீரர்கள்:

இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் இருந்தே நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றிருந்தார். இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் வீசியதன் மூதல் முதல் சுற்றில் பெற்றிருந்த முன்னிலையை அவர் மேலும் அதிகப்படுத்தினார். நீரஜ் சோப்ராவுக்கு செக் குடியரசின் Vitezslav Vesely (85.44மீ) , ஜெரிமனியின் Julian Weber (85.30 மீ) ஆகியோர் சவால் அளித்தனர். பாகிஸ்தானின் நதீம் அதிகபட்சமாக 84.62 மீ வீசினார்.

Also Read:  ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

மூன்றாவது சுற்றுக்குப் பின்னர் நீரஜின் அளவை யாராலும் நெருங்க முடியாததால் நீரஜ் தான் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படியே இறுதிச் சுற்றான 6வது சுற்று வரை சென்றது. இறுதியில் தித்திப்பான வெற்றியை இந்தியாவுக்காக பெற்றுத்தந்தார் நீரஜ் சோப்ரா.

100 ஆண்டுகால ஏக்கம்:

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தை இந்தியா வசப்படுத்தியிருக்கிறது. சுமார் 100 ஆண்டுகால தங்கப் பதக்க ஏக்கத்தை நீரஜ் போக்கிவைத்திருக்கிறார். சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

neeraj chopra


தனிநபர் பிரிவில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் அபினவ் பிந்த்ரா.

2017ல் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தவர் நீரஜ் சோப்ரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் இந்த நீரஜ் சோப்ரா:

ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா. உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 47வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: