• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய ஒலிம்பிக் ஹாக்கி வெண்கல வெற்றி: சர்ச்சைக்குள்ளான கம்பீர் கருத்து

இந்திய ஒலிம்பிக் ஹாக்கி வெண்கல வெற்றி: சர்ச்சைக்குள்ளான கம்பீர் கருத்து

கவுதம் கம்பீர்.

கவுதம் கம்பீர்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது, இந்த வெற்றி கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிகளை விடவும் பெரிது என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது, இந்த வெற்றி கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிகளை விடவும் பெரிது என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.



    கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். ஹாக்கியில் இந்த பதக்கம் எந்த ஒரு உலகக்கோப்பையை விடவும் பெரியது” என்று பதிவிட்டுள்ளார்.
    ஆனால் கவுதம் கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் எடுபடவில்லை. இரண்டு விளையாட்டுகளையும் ஒப்பிடுவதே தவறு என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.



    நீங்கள் 2007, 2011 உலகக்கோப்பையில் நீங்கள் ஒரு ஹீரோ ஆனாலும் இப்படி சொல்கிறீர்களே ஏன்? என்று வலைவாசி ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

    இன்னொரு நெட்டிசன்,  ‘சார் இது அரசியல்வாதியின் ட்வீட் போல் உள்ளதே தவிர விளையாட்டு வீரரின் கருத்து போல் தெரியவில்லை. மற்ற சாதனைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்’ என்று அட்வைஸ் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    ஒரே விளையாட்டின் இரு வேறு காலக்கட்டத்தையே ஒப்பிட வேண்டாமென்ற காலத்தில் இருவேறு விளையாட்டையே அவர் ஒப்பிடுகிறார் என்று ஒரு ரசிகர் கம்பீரை விமர்சித்துள்ளார்.
    நாம் இரண்டு சாதனைகளையுமே கொண்டாடும்போது ஒன்றை ஏன் மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் கம்பீர் மீது பாய்ந்துள்ளனர்.
    வேறு சிலர் சர்ச்சைகள் இல்லாமல் ஹாக்கி வெற்றியை புகழுங்கள் கம்பீர் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: