Home /News /sports /

கிரிப்டோசெஸ்: அரோனியனை வீழ்த்தி பிரக்ஞானந்தா 4 போட்டிகளில் தொடர் வெற்றி

கிரிப்டோசெஸ்: அரோனியனை வீழ்த்தி பிரக்ஞானந்தா 4 போட்டிகளில் தொடர் வெற்றி

மாஸ்டர் பிரக்ஞானந்தா

மாஸ்டர் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் மியாமி நகரில் எப்.டி.எக்ஸ்கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டிகள் நடந்து வருகிறது . இதில் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ,உலகின் 6 ஆம் நிலை வீரரான அமெரிக்க வீரர் லெவன் அரோனியனை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் 3-1 என்ற கணக்கில் லெவன் அரோனியனை தோற்கடித்து, பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக 4வது வெற்றியைப் பதிவு செய்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அமெரிக்காவின் மியாமி நகரில் எப்.டி.எக்ஸ்கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டிகள் நடந்து வருகிறது . இதில் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ,உலகின் 6 ஆம் நிலை வீரரான அமெரிக்க வீரர் லெவன் அரோனியனை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் 3-1 என்ற கணக்கில் லெவன் அரோனியனை தோற்கடித்து, பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக 4வது வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் ,நார்வே வீரர் மாக்ன்ஸ் கார்ல்சன்னுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார் பிரக்ஞானந்தா.

    உலக தரவரிசை 6ம் நிலையில் இருக்கும் வீரர் அரோனியன். இவரை 3-1 என்று வென்றார் பிரக்ஞானந்தா, கார்ல்சனும் சீனாவின் குவாங் லியம் லீ என்பவரை 3-1 என்று வீழ்த்தினார். பிரக்ஞானந்தாவுக்கும் அரோனியனுக்குமான முதல் 2 கேம்கள் டிராவில் முடிய 3வது போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளைக்காய்களுடன் ஆடினார்.

    இதில் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலை பெற்ற பிரக்ஞானந்தா பிறகு 4வது கேமில் 44வது நகர்த்தலில் அரோனியனை முறியடித்தார். இதன் மூலம் 3-1 என்று வெற்றி பெற்றார்.

    ஈரானின் ஜூனியர் உலக நம்பர் 1 அலிரேசா பிரவுஸ்ஜா என்பவருக்கு எதிராகத் தொடங்கிய பிரக்ஞானந்தா இவரை வீழ்த்தி பிறகு அனிஷ் கிரி மற்றும் ஹான்ஸ் நீய்மான் ஆகியோரையும் வீழ்த்தினார்.

    8 வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இன்னும் 3 சுற்றுகள் பாக்கியிருக்கின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa

    அடுத்த செய்தி