• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Tokyo Olympics| பக்கவாதத்திலிருந்து மீண்டு உயிர் பெற்ற மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்கின் வெற்றிக் கதை

Tokyo Olympics| பக்கவாதத்திலிருந்து மீண்டு உயிர் பெற்ற மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்கின் வெற்றிக் கதை

சோனம் மாலிக்

சோனம் மாலிக்

62 கிலோ உடல் எடைப்பிரிவு மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் பங்கேற்பதன் ஆச்சரியம் என்னவெனில் இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கவாதம் ஏற்பட்டு கையை தூக்க முடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது தகுதி பெற்றுள்ளார்.

 • Share this:
  ஜூலை 23ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன, இதில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் ,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர், அதில் 62 கிலோ உடல் எடைப்பிரிவு மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் பங்கேற்பதன் ஆச்சரியம் என்னவெனில் இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கவாதம் ஏற்பட்டு கையை தூக்க முடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது தகுதி பெற்றுள்ளார்.

  2017ம் ஆண்டில் சோனம் மாலிக்கினால் மீண்டும் விளையாட்டு உலகிற்குள் வர முடியாது என்ற நிலையே இருந்தது. வலது தோள்பட்டையில் ஏதோ கோளாறு ஏற்பட வலது பக்கம் முழுதும் வாதம் தாக்கியது, பக்கவாதத்தினால் அவர் 6 மாத காலம் அவதியுற்றார்.

  இந்த துயரம் அவரை எப்போது தாக்கியது என்றால் இதற்கு முன்பாகத்தான் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் தங்கம் வென்றார், தங்கம் வென்ற உடனேயே இந்தத் துயரம் இவருக்கு ஏற்பட்டது. பக்கவாதம் முடக்க உடைந்து நொறுங்கிப் போனார் சோனம் மாலிக்.

  அவரால் கையை உயர்த்த முடியவில்லை, எதையும் தூக்க முடியவில்லை. தோள்பட்டையின் நரம்புகள் அவரது கைகளுக்கு எந்த வித சிக்னல்களையும் அனுப்ப முடியவில்லை என்பதே இவரை முடக்கியது. மருத்துவர் ‘மல்யுத்தத்தை மற, வாழ்க்கையை தொடரப்பார்’ என்று அறிவுரையே வழங்கி விட்டார்.

  ஹரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள மெதினா கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சோனம் மாலிக். 2014 முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் தான் இவரது பயிற்சி இடம்.

  பக்கவாதம் வந்த பிறகு மருத்துவர் வேறு ஜோலியைப்பார் என்று கூறுவதை கேட்டு மனம் ஒடிந்து போகாமல் மீண்டும் உழைத்தார், அவரது தந்தையின் உதவியால் பக்கவாதத்திலிருந்து மீண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரது தந்தை ராஜேந்தர் மாலிக், இவரே ஒரு மல்யுத்த வீரர்தான், மகள் பற்றி கூறும்போது, “எனக்கு வருமானம் போதவில்லை, அதனால் பெரிய டாக்டரிடம் காட்ட வசதியில்லை. ஆயுர்வேத மருத்துவம் பார்த்துத்தான் குணப்படுத்தினோம். அவர் மல்யுத்தத்திற்கு திரும்புவது கடவுள் சித்தம், அதனால்தான் மீண்டு வர முடிந்தது.

  2018-ல் மீண்டு வந்து ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றார். பிறகு ரியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கை வீழ்த்தினார். அதன்பிறகு மூன்று முறை சாக்‌ஷி மாலிக்கை வீழ்த்தினார் சோனம் மாலிக்.

  ஒலிம்பிக் தகுதி பெற்றது எப்படி?

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர் சடுதியில் தகுதி பெற்று விட்டார். சீனாவின் ஜியா லாங் (5-2), சைனீஸ் தைபே சின் பிங் பய் என்பவரை 11-0 என்று இரண்டு அபார வெற்றிகளைப் பெற்று ஆசிய தகுதிச் சுற்று அரையிறுதியில் நுழைந்தார். உலக சாம்பியன்ஷிப் வெண்கலப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை அயாலிம் காஸிமோவாவிடம் 0-6 என்று பின் தங்கியிருந்த நிலையில் எழுச்சி பெற்று 9-6 என்று வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார்.

  இவரிடமிருந்து இந்த முறை குறைந்தது வெள்ளிப்பதக்கம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: