French Open 2021 Novak Djokovic: பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜோகோவிச்: 2 செட்கள் பின்னடைவிலிருந்து மகா எழுச்சி பெற்று 19வது பட்டம் வென்றார்

பிரெஞ்ச் ஓபன் பட்டத்துடன் ஜோகோவிச்.

ரோலாண்ட் கேரோஸில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

  • Share this:
    இது ஜோகோவிச் வெல்லும் 19வது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டமாகும். ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஜோகோவிச் அவர்களுடன் இணைய இன்னும் ஒரு பட்டம் மீதமுள்ளது.

    பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் நடால் 3வது செட்டில் 6-5 என்ற நிலையில் டபுள் ஃபால்ட் செய்து செட்டை டை பிரேக்கரில் கோட்டை விட அங்கிருந்து ஜோகோவிச் எழுச்சி பெற்று மண் தரை டென்னிஸ் மன்னன் நடாலை வெளியேற்றினார்.

    நேற்று இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ் முதல் 2 செட்களில் ஜோகோவிச்சை ஆட்டிப்படைத்தார், ஜோகோவிச்சும் ஏகப்பட்ட அன்ஃபோர்ஸ்டு எரர் செய்தார். ஆனால் 3வது செட்டில் திடீரென ஆட்டம் கைமேல் உட்கார செட்டை 6-3 என்று கைப்பற்ற அங்கிருந்து சிட்சிபாஸ் சொதப்பத் தொடங்கினார். 6வது முறையாக ஜோகோவிச் 2 செட்கள் தோல்வியிலிருந்த் மீண்டெழுந்து போட்டியை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 2 செட்கள் பின்னடைவு கண்டு மீண்டெழுந்தது ஜோகோவிச்சுக்கு 2வது முறையாகும்.

    சிட்சிபாஸ்-ஜோகோவிச்


    திடீரென அவருக்கு சர்வ்களெல்லாம் துல்லியமாக விழத் தொடங்கின. சிட்சிபாஸுக்கு இதுதான் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும். ஜோகோவிச்சுக்கு இது 29வது போட்டி, ஆகவே அனுபவமும் ஜோகோவிச் பக்கம் உள்ளது. மேலும் 5 செட் போட்டிகளில் ஜோகோவிச் ரெக்கார்ட் 34-24 ஆகும், மாறாக சிட்சிபாஸின் ரெக்கார்ட் 5-4.

    கடைசி 3 செட்களிலும் சிட்சிபாஸ் சர்வை தொடக்கத்திலேயே முறியடித்து ஆதிக்க நிலை பெற்றார் ஜோகோவிச். டென்னிஸ் வரலாற்றில் ராட் லேவர், ராய் எமர்சனுக்கு பிறகு ஒரே ஆண்டில் நடைபெறும் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இருமுறை வென்ற வீரரானார் ஜோகோவிச். ஆனால் கிராண்ட் ஸ்லாம் பைனலில் முதல் முறையாக 2 செட்கள் தோற்று பிறகு எழுச்சி பெற்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்று சிட்சிபாஸ் முதல் செட்டில் ஒரு செட் பாயிண்ட்டை காப்பாற்ற, ஆட்டம் டை பிரேக்கருக்குச் செல்ல அதில் 8-6 என்று வென்றார். 4வது செட் தொடங்கும் முன் சிட்சிபாஸ் இடுப்பு காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றார், வந்தவுடனேயே ஜோகோவிச் அவரது சர்வை முறியடித்தார். பிறகு ஒரு பிரமாதமான டிராப் ஷாட் மூலம் இன்னொரு பிரேக்கையும் சாதித்தார்.

    மேட்ச் புள்ளிவிவரங்களை பார்த்தால் சிட்சிபாஸ் 14 ஏஸ்களை அடித்தார், ஜோகோவிச் 5 சர்வ்களையே ஏஸ்களாக அடித்தார். சிட்சிபாஸ் 2வது செட்டுக்குப் பிறகு 4 டபுள் பால்ட்களை செய்தார், ஜோகோவிச் 3 டபுள் பால்ட்கள். மொத்த வின்னர்கள் என்று பார்த்தால் சிட்சிபாஸ் 61, ஜோகோவிச் 56. ஆனால் தோற்கும் போதுதான் ஜோகோவிச் அபாயகரமான வீரர் என்பதை நேற்று நிரூபித்தார்.
    Published by:Muthukumar
    First published: