ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிரெஞ்சு பேட்மிண்டன் தொடர்.. இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி!

பிரெஞ்சு பேட்மிண்டன் தொடர்.. இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி!

சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி

சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பேட்மிண்டன் பிரிவின் சூப்பர் 750 பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும், சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internation, Indiafrancefrancefrance

  பிரெஞ்சு பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்திய ஆடவர் அணியான சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது .

  கடந்த 25 முதல் 30-ம் தேதி வரையில் நடந்த இந்த தொடரில், மொத்தம் 11 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

  பாரீசில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், உலக இரட்டையர் தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபே-யின் Lu-ching-Yao மற்றும் Yang-po-han ஜோடியை எதிர்கொண்டது.

  இதையும் படிக்க : இது எல்லை மீறிய செயல்.. ரசிகரை கடுமையாக சாடிய விராட் கோலி

  ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றனர். மொத்தம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பேட்மிண்டன் பிரிவின் சூப்பர் 750 பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும், சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்றுள்ளது.

  பிரெஞ்சு பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற இந்த ஜோடி 44,400 அமெரிக்க டாலர்களை பரிசாக பெற்றுள்ளனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Indian team, Paris Masters tennis, Tennis