வெள்ளி இரவு நடைபெற்ற இந்த காவிய அரையிறுதியில் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 4 மணி நேரம் சென்ற இந்த ஆட்டம் பிரமாதமான டென்னிஸ் விருந்தாக அமைந்தது. 2016-ல் ஜோகோவிச் தான் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆனார். 2015 தொடரில் களிமண் தரை மன்னனான நடாலை இதே ஜோகோவிச் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றிய மகா ஆட்டத்தில் கடைசி 6 கேம்களை ஜோகோவிச் வென்றார். பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றால் அது ஜோகோவிச்சின் 2வது பட்டமாகும், மொத்தமாக 19வது சாம்பியன் பட்டமாக இது இருக்கும். இது ஜோகோவிச்சுக்கு 29வது கிராண்ட் ஸ்லாம் இறுதி, மாறாக சிட்சிப்பியாசுக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதி. சிட்சிபியாஸ் இன்னொரு அரையிறுதியில் ஸ்வெரேவ் என்ற வீரரை போரடி 5 செட்களில் வீழ்த்தினார்.
பாரீசில் தான் ஆடியதிலேயே மிகச்சிறந்த மேட்ச் இது என்கிறார் ஜோகோவிச். இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, தன் ட்விட்டர் பக்கத்தில், “இதை விட கிளே கோர்ட்டில் சிறப்பான டென்னிஸ் ஆட்டத்தை ஆடிவிட முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: Euro 2020 Italy vs Turkey : இத்தாலி 3-0 என ஆதிக்க வெற்றி; ஓன் கோலால் சறுக்கிய துருக்கி
நேற்றைய அரையிறுதியில் நடால் முதல் 5 கேம்களை வென்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் 2வது செட்டை வென்ற ஜோகோவிச்சுக்கு ஆட்டம் சூடுபிடித்தது.
பிறகு இந்த அரையிறுதியின் முத்தாய்ப்பான ஆட்டமாக 3வது செட்டை கருதலாம் 93 நிமிடம் ஆடப்பட்ட செட் ஆகும் இது, டென்னிஸ் ஆட்டத்திலேயே மிகப்பிரமாதமான டை பிரேக் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஜோகோவிச் 7-6 என்று வெற்றி பெற்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரான்சின் 107 மண் தரை ஆட்டங்களில் 105-ல் வென்று நடால் சாதனை படைத்துள்ளார், ஆனால் நேற்று ஜோகோவிச்சின் தினமானது. 4வது செட்டில் 4-2 என்று முன்னிலை பெற நடால் சர்வை பிரேக் செய்த ஜோகோவிச் அதிவிரைவில் செட்டைக் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சியளித்தார்.
ஒரு விதத்தில் நடால் தோல்விக்குக் காரணம் அவர் 8 முறை சர்வீசில் டபுள் பால்ட் செய்தார். மேலும் அன்ஃபோர்ஸ்டு பிழை என்பதில் நடால் 55 முறை தவறிழைத்தார், ஜோகோவிச் 37 முறைதான் தவறிழைத்தார். மாறாக ஜோகோவிச் 3 முறைதான் செய்தார். அதே போல் முதல் சர்வில் ஜோகோவிச் சிறப்பாகத் திகழ நடாலுக்கு முதல் சர்வ் அவ்வளவாகக் கைகொடுக்கவில்லை.
முக்கியத் தருணங்களில் நடாலின் ஆட்டத்தில் துல்லியம் இல்லாமல் போனது. குறிப்பாக 6-5 என்று செட் பாயிண்டில் இருந்த போது நடால் டபுள் ஃபால்ட் செய்தார். அதில்தான் டை பிரேக்குக்குச் சென்று அதில் ஜோகோவிச் 7-4 என்று வெற்றி பெற்றார். இதுதான் நடாலின் தோல்விக்குக் காரணம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: French Open, Novak Djokovic, Rafael Nadal