ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் 60 ஆண்டுகால உலகக்கோப்பை சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர்

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் 60 ஆண்டுகால உலகக்கோப்பை சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர்

பீலேவின் உலகக்கோப்பை சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர்

பீலேவின் உலகக்கோப்பை சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர்

Fifa Worl Cup 2022 | போலந்துக்கு எதிரான போட்டியில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 60 ஆண்டுகளாக ஜாம்பாவன் பீலே வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார் பிரான்சின் எம்மாப்பே.

வேகமாக ஓடுபவர் யார்?... ஹூசைன் போல்டா அல்லது பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்மாப்பேவா என விளையாட்டு உலகில் விவாதங்கள் எழுந்தது உண்டு. கால்பந்து மைதானத்தில் அவ்வளவு வேகமாக ஓடுபவர் எம்மாப்பே.

2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் டீன் ஏஜ் வீரராக களம் கண்டு, கத்தார் உலகக் கோப்பையிலும் அசத்தி வருகிறார். போலந்துக்கு எதிரான போட்டியில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

இரு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ள எம்மாப்பே இதுவரை 9 கோல்கள் அடித்துள்ளார். 24 வயதுக்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற 60 ஆண்டு கால பீலேவின் சாதனையை எம்மாப்பே தகர்த்துள்ளார்.

Also Read : கோல் அடித்தபோது கொண்டாடிய குடும்பம்.. வீடியோவை பார்த்து நெகிழ்ந்த மெஸ்ஸி.. வைரல் வீடியோ!

ஜெர்மனியைச் சேர்ந்த குலோஸ் (Klose) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 16 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ளார். குறைந்தபட்சம் இன்னும் 3 உலகக் கோப்பைகளில் எம்மாப்பே விளையாட வாய்ப்பு உள்ள நிலையில், குலோஸிசின் சாதனையையும் அவர் முறியடிப்பார் என கால்பந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar