இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!

#Croatia’s #IgorStimac set to be appointed #Indianfootballteam's head coach | புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

news18
Updated: May 10, 2019, 1:41 PM IST
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!
இகோர் ஸ்டிமாக். (AFP)
news18
Updated: May 10, 2019, 1:41 PM IST
இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2019 தொடக்கம் வரை இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பணியாற்றினார். இவரது காலத்தில் இந்திய அணி, சர்வதேச தரவரிசையில் 173-வது இடத்தில் இருந்து 96-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசியக் கோப்பை கால்பந்து தொடருடன் கான்ஸ்டன்டைன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, புதிய பயிற்சியாளர் நியமிப்பது குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டது.


Indian Football Team, இந்திய கால்பந்து அணி.
இந்திய கால்பந்து அணி. (AFC Media)


மொத்தம் விண்ணப்பித்த 40 பேரில் இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), லீ மின் சுங் (தென்கொரியா), ஆல்பர்ட் ரோகா (ஸ்பெயின்), ஹகன் எரிக்சன் (சுவீடன்) ஆகிய 4 பேர் இறுதி செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.

இதன்முடிவில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய பயிற்சியாளர் பெயர் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...