Home /News /sports /

இந்தியாவில் மனித உரிமைகள் நிலவரம் வெட்கக்கேடு - கால்பந்து வீரர் தாக்கு- இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை

இந்தியாவில் மனித உரிமைகள் நிலவரம் வெட்கக்கேடு - கால்பந்து வீரர் தாக்கு- இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை

ஜெர்மனி முன்னாள் கால்பந்து வீரர் மெசுட் ஒசில்

ஜெர்மனி முன்னாள் கால்பந்து வீரர் மெசுட் ஒசில்

ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மெசுட் ஓஸில் இந்தியாவில் மனித உரிமைகள் மீறல் தொடர்ந்து நடப்பதாக கடும் குற்றம்சாட்டியுள்ளார். லைலத் அல்-கதர் இரவில், கால்பந்து வீரர் மெசுட் ஓஸில் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் மனித உரிமை நிலைமைகள் வெட்கக்கேடானது என்றும் ஓசில் கண்டித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    ஆர்சனல் அணிக்கு ஆடும் அதிக சம்பளம் வாங்கும் மெசுட் ஒஸில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், "இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக லைலத் அல்-கத்ரின் புனித இரவில் பிரார்த்தனை செய்கிறேன். இந்த வெட்கக்கேடான சூழ்நிலைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! என்ன நடக்கிறது? உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் நாட்டில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

    அவருடைய ட்வீட் இதோ:

    2019 டிசம்பரில், துருக்கி மொழி பேசும் முஸ்லீம் சிறுபான்மையினரான உய்குர்களை சீனா துன்புறுத்தியதாகக் கூறப்படும் துன்புறுத்தலை ஓசில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாத தொடக்கத்தில், 33 வயதான அவர் ரஷ்யா-உக்ரைன் போரின் போது உலக அமைதி குறித்து ஒரு செய்தியை வெளியிட்டார்.

    "உலகில் அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம் - உக்ரைனில் மட்டுமல்ல, பாலஸ்தீனம், சிரியா, ஏமன், ஈராக் மற்றும் உலகில் மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் #StopWAR #JummaMubarak #M1Ö" என்று ஓசில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஜெர்மனி கால்பந்தில் நிறவெறி இருப்பதாகக் குற்றம்சாட்டி 2018-ல் மெசுட் ஒசில் அந்த அணியை விட்டு விலகினார், இப்போது துருக்கி சூப்பர் லீக் கிளப் ஃபெனர்பாஹ்சுக்கு கேப்டனாகவும் மிட்ஃபீல்டராகவும் ஆடி வருகிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Attack on muslims, Football

    அடுத்த செய்தி