• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Football Worldcup qualifiers|  ரொனால்டோ இதயம் நொறுங்கியது- செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வி- போர்ச்சுகல் உலகக்கோப்பை தகுதி கடினம்

Football Worldcup qualifiers|  ரொனால்டோ இதயம் நொறுங்கியது- செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வி- போர்ச்சுகல் உலகக்கோப்பை தகுதி கடினம்

தோல்வியில் மனமுடைந்த ரொனால்டோ

தோல்வியில் மனமுடைந்த ரொனால்டோ

ஆட்டம் முடியும் தறுவாயில் 90வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோ விச் தலையால் முட்டிய கோல் போர்ச்சுகல், ரொனால்டோவின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2-1 என்று வெற்றி பெற்று செர்பியா 2022 உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்று கடினமான பிளே ஆஃப் சுற்றை எதிர்நோக்கி போர்ச்சுக்கல் காத்திருக்கிறது, அதுவும் உறுதியல்ல.

  • Share this:
    உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று கால்பந்தாட்டத்தில் செர்பியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த போர்ச்சுகல் அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, ரொனால்டோவும் போர்ச்சுக்கலை காப்பாற்ற முடியவில்லை.

    செர்பியா அணி முதல் முறையாக போர்ச்சுகலை வென்று 3 புள்ளிகள் பெற்று 20 புள்ளிகளூடன் குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடித்ததோடு 2022 உலகக்கோப்பைக்கு செர்பியா தகுதி பெற்று விட்டது. ஆனால் போர்ச்சுகல் அணி அடுத்த ஆண்டு பிளே ஆஃப் ஆடித்தான் தகுதி பெற முடியும், ஆனால் மிக மிகக் கடினம் என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள், கடைசியாக போர்ச்சுகல் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறாமல் போனது 1998-ம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு குரூப் ஏ ஆட்டத்தில் அயர்லாந்து அணி லக்சம்பர்க் அணியை 3-0 என்று வீழ்த்தியது. செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணிதான் 2வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை வகித்தது. ரெனாட்டோ சான்சேஸ் செர்பியாவின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். ஆனால் இந்த சந்தோஷம் 33வது நிமிடத்தில் பறிபோனது, செர்பியாவின் ட்யூசன் டேடிக் ஒரு கோலை அடித்து சமன் செய்தார்.

    ஆட்டம் முடியும் தறுவாயில் 90வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோ விச் தலையால் முட்டிய கோல் போர்ச்சுகல், ரொனால்டோவின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2-1 என்று வெற்றி பெற்று செர்பியா 2022 உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்று கடினமான பிளே ஆஃப் சுற்றை எதிர்நோக்கி போர்ச்சுக்கல் காத்திருக்கிறது, அதுவும் உறுதியல்ல.

    மற்ற பிரிவுகளின் ரன்னர்களுடன் போர்ச்சுகல் மோதித்தான் 2022 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியும். உலகக்கோப்பைத் தகுதி சுற்றில் 6 கோல்களை அடித்த ரொனால்டோ இந்தப்போட்டியில் அடக்கியாளப்பட்டார். ஏனெனில் இது தகுதிச்சுற்றின் கடைசி லீக் போட்டியாகும்.

    இதுவரை ஸ்பெயின், செர்பியா, குரேஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஸ்வீடன், போர்ச்சுகல், ரஷ்யா இன்னும் தகுதி பெறவில்லை, தகுதி பெறுவதும் மிகமிகக் கடினம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: