கிரேட் பிளேயர் என்ற அடைமொழி எப்போதும் குட் பிளேயர் என்பதை விட உயர்வாக கூறப்படுவதற்கான உயர்வு நவிற்சியே. அந்த வகையில் கிரேட் பிளேயர்கள் என்றால் அவர்கள் சரியான நேரத்தில் அணியைக் காப்பாற்ற, வெற்றி பெறச் செய்ய பெரிய அளவில் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தி வெற்றி பெறச் செய்வார்கள். குட் பிளேயர் என்பவர் மாறாக நன்றாக ஆடுபவர் அவ்வளவே. அந்த வகையில் போர்ச்சுகல் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட அர்ஜெண்டினா லெஜண்ட் லியோனல் மெஸ்ஸி கிரேட் பிளேயர் வரிசையில் திகழ்கிறார்.
எப்படியெனில் நேற்று, 2022உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடைசி லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி செர்பியாவிடம் 1-2 என்று அதிர்ச்சித் தோல்வி அடைய செர்பியா அணி நேரடியாக உலகக்கோப்பை 2022-க்குத் தகுதி பெற்றது, இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ஆட்டம் சரிப்படவில்லை. கிரேட் பிளேயர் என்றால் அணியை பிரச்சனைகளிலிருந்து விடுவித்து காப்பாற்ற வேண்டும்.
இந்த ஆட்டத்தில் ட்ரா செய்தாலே போதும் போர்ச்சுகல் அணி நேரடியாக 2022 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றிருக்கும், ஆனால் ரொனால்டோ ஆட்டம் சோபிக்காததால், அவரை செர்பியா அடக்கி ஆண்டதால் இப்போது போர்ச்சுகல் அணி 1998-க்குப் பிறகு உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெறாமல் போகும் துயரம் ஏற்பட்டுள்ளது.
ஏன் மெஸ்ஸி பெரிய ஆள் என்றால் இதே போன்ற சூழ்நிலையில் அவர் peaking at the right time என்பார்களே, கிரேட் பிளேயர்களின் குணாம்சமான இதை நேற்று செய்ய ரொனால்டோ தவறிவிட்டார். மெஸ்ஸி செய்து காட்டினார். எப்போது எனில் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்கு தகுதி பெற அர்ஜெண்டினாவுக்கு ஒரேயொரு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

ரொனால்டோ
ரொனால்டோவுக்காவது ட்ரா செய்தால் போதும் ஆனால் மெஸ்ஸிக்கு வெற்றி பெற்றால்தான் உலகக்கோப்பை 2018 கால்பந்துக்குத் தகுதி பெற முடியும். இந்நிலையில் கடினமான ஈக்வடார் அணிக்கு எதிரான போட்டியில் லியோனல் மெஸ்ஸி தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ஹாட்ரிக் கோல்களை அடித்து அர்ஜெண்டினாவை 3-1 என்று வெற்றி பெறச் செய்து 2018 உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை தகுதி பெற செய்தார்.
ஈக்வடாரின் ரொமாரியோ இபாரா அர்ஜெண்டினா கோல் கீப்பர் ரொமீரோவைத் தாண்டி முதல் கோலை அடித்த போது நேற்று போர்ச்சுகல் இருதயம் நொறுங்கியது போன்றே அர்ஜெண்டினா இதயமும் நொறுங்கியது. ஈக்வடார் வெற்றி பெற்றிருந்தால் 1970-க்குப்பிறகு அர்ஜெண்டீனா உலகக்கோப்பை கால்பந்துக்குத் தகுதி பெறாமலே போயிருக்கும்.
Also Read: Football Worldcup qualifiers| ரொனால்டோ இதயம் நொறுங்கியது- செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வி- போர்ச்சுகல் உலகக்கோப்பை தகுதி கடினம்
ஆனால் ஏஞ்செல் டி மரியாவின் பாஸை மெஸ்ஸி கோலாக மாற்றி சமன் செய்தார். இதற்கு 9 நிமிடங்கள் சென்று மெஸ்ஸியின் வழக்கமான மின்னல் வேக ஓட்டத்தில் ஈக்வடார் கோல் வலை சிதறியது. 2வது கோலை அடித்தார் மெஸ்ஸி. அதே போல்தான் 3வது ஹாட்ரிக் கோலையும் கிட்டத்தட்ட ஈக்வடார் பகுதியிலிருந்து கடைந்து எடுத்துச் சென்று சிங்கிள் ஆளாக கோலாக மாற்றி வெற்றி பெறச் செய்தார். இதுதான் ஒன் மேன் ஷோ என்பது மாறாக நேற்று அவசியம் ஏற்பட்ட நிலையில் ரொனால்டோ கையாலாகாத் தனமாக, அல்ல காலால் ஆகாத்தனமாக தோல்வியில் இதயம் நொறுங்கிப் போனார்.
ஆகவே மெஸ்ஸி கிரேட் பிளேயர் ஏனெனில் சரியான தருணத்தில் உச்சம் பெறுபவர்கள் கிரேட் பிளேயர்கள், அந்தவகையில்தான் கேன் வில்லியம்சன் நேற்று கிரேட் பிளேயர், வார்னர் கிரேட் பிளேயர், நம் கோலி குட் பிளேயர்தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.