• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Lionel Messi | கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!

Lionel Messi | கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!

கண்ணீருடன் மெஸ்ஸி.

கண்ணீருடன் மெஸ்ஸி.

பிரியாவிடை நிகழ்ச்சியில் மெஸ்ஸி அழுகையுடன் பேசுகையில், இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என நினைக்கவே இல்லை என்றார்.

  • Share this:
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் பத்ரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டார். அவரின் அழுகையை அடக்க முடியாமல் சிறிது நேரம் உணர்ச்சிவசத்தில் தடுமாறினார்.

நிகழ்கால கால்பந்து ஜாம்பவானாக திகழும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்ஸிக்கு வயது 34. இவர் அர்ஜெண்டினா தவிர்த்து பார்சிலோனா கிளப் அணிக்காக கால்பந்து ஆடி வருகிறார். சமீபத்தில் பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை பார்சிலோனா அணியும் உறுதிப்படுத்தியிருந்தது.

Also Read: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் – நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

இந்நிலையில் மெஸ்ஸியை வழியனுப்புவதற்கான பிரியா விடை நிகழ்ச்சிக்கு இன்று பார்சிலோனா அணி ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மெஸ்ஸி பேச முடியாமல் தவித்தார். அவர் அழுக தொடங்கினார். அவரால் அழுகையை நிறுத்த முடியாமல் உணர்ச்சிவசத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார். மெஸ்ஸியின் உணர்வுகளை புரிந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் அவருக்கு கைதட்டி அன்பை வெளிப்படுத்தினர்.



அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸியை பட்டை தீட்டியது பார்சிலோனா கிளப் அணி தான். 2000ம் ஆண்டில் தனது 13 வயதில் பார்சிலோனா அணிக்குள் அடியெடுத்து வைத்தார் மெஸ்ஸி. அதன் பின்னர் 21 ஆண்டுகாலம் அவர் பார்சிலோனா அணியுடன் பயணித்திருக்கிறார். பார்சிலோனா அணிக்காக இதுவரையில் 682 கோல்கள் அடித்திருக்கிறார் மெஸ்ஸி. ஆறு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார்.

Also Read: Alcoholism | குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட புதிய இரட்டை மருந்து சிகிச்சை!

முன்னதாக தனிப்பட்ட ஒரு கிளப் அணிக்காக கால்பந்து ஜாம்பவான் பீலே 643 கோல்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. அதனை மெஸ்ஸி முறியடித்து புதிய சாதனை படைத்தார். மேலும் அந்த அணிக்காக 35 சாம்பியன் கோப்பைகளை மெஸ்ஸி பெற்றுத் தந்திருக்கிறார்.

இத்தனை பிணைப்புடன் இருந்த பார்சிலோனா அணியை விட்டு மெஸ்ஸி விலகும் சூழல் ஏற்பட்டதற்கான காரணம் பார்சிலோனா அணியின் நிதி நெருக்கடிதான். மெஸ்ஸியை தக்க வைக்கும் அளவுக்கு அந்த கிளப்பில் பண நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், வேறு சில காரணங்களும் மெஸ்ஸியை தக்க வைக்க முடியாததற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது.

பிரியாவிடை நிகழ்ச்சியில் மெஸ்ஸி அழுகையுடன் பேசுகையில், “இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என நினைக்கவே இல்லை. இந்த கிளப்புக்குள் வந்த முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையிலும் என்னால் முடிந்தவற்றை கொடுத்திருக்கிறேன். பல ஆண்டுகள், இந்த கிளப்புடன் ஒன்றாக இருந்து என் வாழ்க்கையையே தந்துவிட்டு இப்போது இதைவிட்டு பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை” என உணர்ச்சிகரமாக பேசினார் மெஸ்ஸி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரங்குக்கு வெளியே மெஸ்ஸி அணியும் 10ம் எண் ஜெர்சியுடன் அவரது ரசிகர்கள் அவர் மீதான அன்பை வெளிப்படுத்தினர். அடுத்ததாக மெஸ்ஸி எந்த அணியுடன் இணைவார் என்பது உறுதியாகவில்லை, ஆயினும் Paris St Germain அணி அவரை இழுக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: