முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிஸ்டியானோ ரொனால்டோ

கிரிஸ்டியானோ ரொனால்டோ

பியர்ஸ் மார்கன் என்ற நிருபரிடம் ரொனால்டோ அளித்த பிரத்தியேக பேட்டியில் மேன்செஸ்டர் அணியை கடுமையாக சாடி கருத்துக்களை தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaLondonLondonLondon

கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரு தரப்பும் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வின் சாதனை பயணத்தை மான்செஸ்டர் அணியை அடித்தளமாகக் கொண்டு தான் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு தனது இளம் வயதில் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்கு விளையாடத் தொடங்கிய ரொனால்டோ, உலகின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்து மான்செஸ்ட்ர அணிக்காக பிரிமியர் லீக் கோப்பை, சாம்பயன்ஸ் லீக் கோப்பை ஆகியவற்றை வென்றார்.

அதேபோல், கால்பந்து ஆட்டத்தின் மிக உயரிய தனி நபர் விருதான பாலோன் டி ஆர் விருதை 2008ஆம் ஆண்டில் வென்றார். பின்னர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மற்றொரு டாப் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியுடன் 2009இல் ஒப்பந்தம் செய்து விளையாடத் தொடங்கினார் ரொனால்டோ. பின்னர் பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தெடுத்த தாய் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டில் கம்பேக் கொடுத்தார். இந்த வருகை இங்கிலாந்து கிளப் தொடர் ரசிகர்களுக்கும், குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகமிக்க செய்தியாக அமைந்தது.

இருப்பினும் இந்த மகிழ்ச்சி இரண்டு சீசன் கூட தொடரவில்லை. தனது கம்பேக்கில் ரொனால்டோவால் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்க முடியவில்லை. கடந்த இரு சீசன்களிலும் அணிக்காக 54 போட்டிகள் விளையாடி 27 கோல்கள் மற்றும் 5 அசிஸ்ட்டுகள் மட்டுமே ரொனால்டோ எடுத்துள்ளார். இந்த சூழலில் கடந்த வாரம் ரொனால்டோ, பியர்ஸ் மார்கன் என்ற நிருபரிடம் அளித்த பிரத்தியேக பேட்டியில் மேன்செஸ்டர் அணியை கடுமையாக சாடி கருத்துக்களை தெரிவித்தார். அணியின் உரிமையாளர்கள் அணியின் வளர்ச்சி குறித்தோ, விளையாட்டை குறித்தோ கவலைப்படவில்லை. அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது. அதேபோல், அணியின் மேலாளர் எரிக் டென் ஹாக் என்னை ஏமாற்றியதாக உணர்கிறேன்.

இதையும் படிங்க: FIFA World Cup 2022 : 36 முறை தொடர்ந்து தோல்வியே சந்திக்காத அர்ஜெண்டினா அணி சவுதியிடம் வீழ்ந்தது

மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை. என்னை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்று பல அதிர்ச்சி கருத்துக்களை பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த பேட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அடுத்த சில நாள்களிலேயே மான்செஸ்டர் அணியில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். இது மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Cristiano Ronaldo, Football