கோவா தலைநகர் பனாஜியில் போர்ச்சுகல் நாட்டு கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் எடை 410 கிலோ. இதை நிறுவியதற்குக் காரணம், இளம் தலைமுறையினர் ஆன்லைன் கேம்களிலும் தேவையற்ற உட்கார்ந்த நிலை ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி படிப்பை இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர், அவர்களை புற விளையாட்டுக்கள் பக்கம் இழுக்கும் அகத்தூண்டுதல் ஏற்படுவதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ சிலை நிறுவப்பட்டுள்ளது.
இது குறித்து கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில்,
“இளைஞர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்திலும் நாட்டிலும் கால்பந்து விளையாட்டை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
எங்கள் குழந்தைகள் இந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரை போல் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அவர் கால்பந்து விளையாட்டில் ஒரு உலக ஜாம்பவான்.
அரசு, மாநகராட்சி, பஞ்சாயத்துக்கள் விளையாட்டுக்கான நல்ல உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். சிலை வெறுமனே அகத்தூண்டுதலுக்காக மட்டுமல்ல, நம் அரசு நல்ல விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். நம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கால்பந்துக்கு தயார் செய்ய நல்ல பயிற்சியாளர்கள் தேவை.
Footballer Cristiano Ronaldo's statue installed in Panaji, Goa. To inspire youth &take football to next level in the state, country, we came up with this statue. We want our children to become like this legendary footballer, who is a global legend:Goa Minister Michael Lobo(28.12) pic.twitter.com/KthPHc7ox0
முன்னாள் வீரர்களை அரசு பயிற்சியாளராக நியமிக வேண்டும். கோவாவுக்காக ஆடி இந்தியாவையே பெருமை கொள்ளச் செய்த முன்னாள் வீரர்களை பயிற்சியில் அமர்த்த வேண்டும். இந்த வகையில்தான் நாம் கள விளையாட்டுக்களில் பெரிய அளவில் வளர முடியும். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் கால்பந்தாட்டத்தில் நாம் மிக மிக பின் தங்கியிருக்கிறோம் என்பது வேதனையாக இருக்கிறது.
சிலர் ரொனால்டோ சிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், அவர்கள்தான் நாடு விளையாட்டுத்துறையில் முன்னேறக்கூடாது என்று நினைப்பவர்கள். இவர்கள் கால்பந்து விரோதிகள். கால்பந்தை அவர்கள் மதமாகக் கருதவில்லை. கால்பந்தாட்டத்தில் மதம், சாதி, நிறபேதங்கள் கிடையாது. ஆனாலும் கருப்புக் கொடி அசைத்து இதை எதிர்க்கிறார்கள். நான் அவர்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. அவர்களுக்கு அடிபணியவே விரும்புகிறேன்” என்றார்.
இந்தச் சிலைக்கான செலவு ரூ.12 லட்சம், கடந்த 3 ஆண்டுகளாக இந்தச் சிலை தயாரிக்கப்பட்டுவருகிறது, கொரோனா பரவலால் நிர்மாணம் தாமதமானது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.