Tokyo olympic: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய இளம்படை- முதற்கட்டமாக 88 பேர் டோக்கியோ சென்றடைந்தனர்!

ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டிக்கு 5 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக வீரர்-வீராங்கனைகள் அடங்கிய 88 பேர் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றனர்.  இதில் 54 பேர் தடகள வீரர்-வீராங்கனைகள் ஆவர்.

  • Share this:
    ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் வரும் வெள்ளியன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 88 பேர் ஜப்பான் சென்றடைந்தனர்.

    2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 8ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெறவுள்ளன.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  போட்டிக்கு 5 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக வீரர்-வீராங்கனைகள் அடங்கிய 88 பேர் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றனர்.  இதில் 54 பேர் தடகள வீரர்-வீராங்கனைகள் ஆவர். அவர்களின் உதவியாளர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனின் பிரதிநிதிகளும் உடன் சென்றுள்ளனர்.   விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இவர்களை வழி அனுப்பிவைத்தனர்.

    மேலும் படிக்க: வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்: பி.வி. சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி!




    முதல் கட்டமாக சென்ற குழுவில், வில்வித்தை, பூப்பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் மற்றும் பளு தூக்குதல் பிரிவில் கலந்துகொள்ள உள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழு இன்று காலை ஜப்பான் சென்றடைந்து.  டோக்கியோ விமான நிலையம் சென்ற அடைந்த அவர்கள், அதன்பின்னர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதையும் படிங்க: ஒலிம்பிக் கிராமத்தில் 2 பேருக்கு கொரோனா: போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்!
    Published by:Murugesh M
    First published: