ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி 2023 : ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கி 2023 : ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கி

உலகக்கோப்பை ஹாக்கி

FIH World Cup 2023 : உலகக்கோப்பை ஹாக்கி 2023 தொடரின் முதல் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கணக்கை தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

15வது ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர்  இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் இன்று  தொடங்கியது. இதில் இந்திய அணி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகிறது. ஓடிசாவில் புபனேஸ்வர் நகரிலும், ரூர்கேலாவில் புதியமாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.

தொடக்க நாளான இன்று, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அர்ஜெண்டினா வீரர் மைக்கோ கசெல்லா (Maico Casella) 43ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதனையடுத்து 3 மணியளவில் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டாம் கிரேக் (tom Craig) முதல் கோலை அடித்து ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தார். அடுத்தடுத்து, தீரத்துடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள், 8 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி துவம்சம் செய்தனர்.

இதையடுத்து டி பிரிவில் நடைபெற்ற இந்தியா - ஸ்பெயின் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. 12வது நிமிடத்தில் அமித் ரோஹிதாசாவும், 21வது நிமிடத்தில் ஹர்திக்கும் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். டி பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 5 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Sports