Home /News /sports /

புரோ லீக் ஹாக்கி - ஜெர்மனியை பந்தாடிய இந்திய அணி முதலிடம்

புரோ லீக் ஹாக்கி - ஜெர்மனியை பந்தாடிய இந்திய அணி முதலிடம்

ஜெர்மனியை 3-1 வீழ்த்தியது இந்திய ஆடவர்

ஜெர்மனியை 3-1 வீழ்த்தியது இந்திய ஆடவர்

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனி அணியை இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய 2வது லீக் ஆட்டம்  நேற்று நடைபெற்றது

    9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனி அணியை இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய 2வது லீக் ஆட்டம்  நேற்று நடைபெற்றது

    9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய 2வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது .இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டி புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்றது.

    சுக்ஜீத் சிங் (19'), வருண் குமார் (41') மற்றும் அபிஷேக் (54') ஆகியோரின் தலா ஒரு கோல், ஜெர்மனி தரப்பில் அன்டன் போகல் (45') மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் அமித் ரோஹிதாஸ் தலைமையிலான இந்திய ஆடவர் அணி 12 ஆட்டங்களில் 27 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 17 புள்ளிகளுடன் ஜெர்ர்மனி 2ம் இடத்தில் உள்ளது.



    ஜெர்மனிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. வியாழக்கிழமை (ஏப்ரல் 14) நடந்த டையின் முதல் லெக் ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடிக்க, துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, ஆட்டநாயகன் அபிஷேக் ஒரு கோல் அடித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hockey

    அடுத்த செய்தி