Home /News /sports /

ஹாக்கி 5- போலந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்-மூன்று கோல் பின்னடைவிலிருந்து எழுச்சி

ஹாக்கி 5- போலந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்-மூன்று கோல் பின்னடைவிலிருந்து எழுச்சி

ஹாக்கி 5- இந்தியா சாம்பியன்

ஹாக்கி 5- இந்தியா சாம்பியன்

லாசேனில் நடைபெற்ற எஃப்.ஐ.எச். ஹாக்கி-5 தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் 3 கோல்கள் பின்னடைவு கண்ட இந்திய அணி அதன் பிறகு பேயாட்டம் ஆடி கோல் மழையில் போலந்தை வீழ்த்தியது.

மேலும் படிக்கவும் ...
    லாசேனில் நடைபெற்ற எஃப்.ஐ.எச். ஹாக்கி-5 தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் 3 கோல்கள் பின்னடைவு கண்ட இந்திய அணி அதன் பிறகு பேயாட்டம் ஆடி கோல் மழையில் போலந்தை வீழ்த்தியது.

    5 அணிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றி ஒரு ட்ராவுடன் பைனலுக்கு வந்த இந்திய அணி வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் தோல்வியடையாத அணியாக சாம்பியன் ஆனது.

    இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி பிறகு பாகிஸ்தானுடன் மீண்டும் டிரா செய்தது. 3வது போட்டியில் மலேசியாவை 7-3 என்ற கோல் மழையில் அபார வெற்றி பெற்றது இந்தியா. பிறகு போலந்தை 6-2 என்று வென்றது.

    பிறகு இறுதிப் போட்டியில் போலந்தை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    ஒரே நாளில் 3 போட்டிகளில் ஆடிய இந்திய அணி அதன் காரணமாகவே முதல் 5 நிமிடங்களில் 3 கோல்கள் வாங்கி பின்னடைவு கண்டது. போலந்து வீரர்கள் மேத்யூஸ் நவகோவ்ஸ்கி, வூசிக் ருட்கோவ்ஸ்கி கேப்டன் ராபர்ட் பாலக் ஆகியோர் கோல்களை அடித்தனர்.



    போலந்து ஒரு போட்டியில் மட்டும் ஆடி அன்றைய தினம் இறுதிக்கு வர இந்திய அணி ஒரே நாளில் 3வது போட்டியில் ஆடியது களைப்பை உருவாக்கியிருக்கும், ஆனால் இந்தியர்கள் களைப்படையவில்லை. 8வது மற்றும் 9வது நிமிடங்களில் சஞ்சய் மற்றும் கேப்டன் குரீந்தர் சிங் இரண்டு கோல்களை அடித்தனர். பிறகு தாமி பாபி சிங், ராஹில் மொகமட் அடுத்தடுத்து கோல்களை அடிக்க இந்தியா 4-3 என்று முன்னிலை பெற்றது.

    பிறகு 17 மற்றும் 19வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் 2 கோல்களை அடித்தது.

    பெண்கள் பிரிவில் ஹாக்கி 5 தொடரில் இந்தியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, போலந்து அணிகள் பங்கேற்றன. உருகுவே, போலந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி கண்டது. பிறகு சுவிட்சர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தென் ஆப்பிரிக்காவுடன் 4-4 என்று ட்ரா செய்தது. ஆனால் இந்திய மகளிர் அணி 4ம் இடமே பிடிக்க முடிந்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hockey, India

    அடுத்த செய்தி