ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

முதல் கோலே மெஸ்ஸி.. மாஸ் காட்டும் அர்ஜெண்டினா.. கோல்களை அடுக்கும் வீரர்கள்..!

முதல் கோலே மெஸ்ஸி.. மாஸ் காட்டும் அர்ஜெண்டினா.. கோல்களை அடுக்கும் வீரர்கள்..!

மெஸ்ஸி - டி மரியா

மெஸ்ஸி - டி மரியா

ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரத்தை அர்ஜெண்டினா அணி வீரர்களே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை இறுதியாட்டத்தின் முதல் பாதியில் 2 கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணி முன்னிலை வகிக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கியது முதல் அர்ஜெண்டினா அணி வீரர்கள் பந்தை தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் டெம்பலே செய்த தவறால் பெனால்டி ஷூட் வாய்ப்பு அர்ஜென்டினா அணிக்கு அளிக்கப்பட்டது. பாக்ஸ் அருகே அர்ஜென்டினா வீரர் டி மரியாவுடன் டெம்பலே மோதியதால் பெனால்டி வாய்ப்பை அர்ஜெடினா பெற்றது.

23 ஆவது நிமிடத்தில் இந்த வாய்ப்பை அணியின் கேப்டன் கோலாக மாற்றினார். பிரான்ஸ் கேப்டனும் கோல் கீப்பருமான லோரிஸை வலது கார்னருக்கு ஏமாற்றி தாவச் செய்து, இன்னொரு முனையில் பாலை அனுப்பி கோலாக மாற்றினார் மெஸ்ஸி.

இதேபோன்று ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த சூப்பரான வாய்ப்பை டி மரியா கோலாக மாற்றி அர்ஜென்டினாவை முன்னிலை பெறச் செய்தார். இதன்பின்னரும் ஆட்டத்தை அர்ஜென்டினா வீரர்களே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்சின் எம்பாப்பே பக்கம் ஒரு சில பந்துகளை சென்றன. அவர் கோலாக்க மேற்கொண்ட முயற்சிகளை அர்ஜெடினா டிஃபெண்டர்கள் ஊதித் தள்ளினர். முதல் பாதியில் பிரான்சின் கேம் பிளான் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: FIFA World Cup 2022