உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. கால்பந்தாட்ட வரலாற்றில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற இறுதிப் போட்டியாக அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையிலான ஆட்டம் அமைந்தது.
ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்ததால் ஆட்டநேரம் முதலில் 8 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதிலும் கோல் விழவில்லை. பின்னர் ஆட்டநேரம் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்த கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால் இரண்டாவது முறையாக 15 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதில் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்த கூடுதல் நிமிடத்திலும் பிரான்சின் எம்பாப்பே கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
பின்னர் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக இந்த ஆட்டம் அமைந்தது. ஆட்டத்தின் முதல் 79 நிமிடங்கள் வரையில் அர்ஜென்டினா அணி 2 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர் 80 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் பிரான்சின் எம்பாப்பே அடுத்தடுத்து கோல்களை அடிக்க, ஆட்டத்தின் பரபரப்பு டாப் கியருக்கு சென்றது.
‘எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடாது…’ – இந்திய அணியை பாராட்டும் கேப்டன் ராகுல்
ஆட்டத்தின் முதல் 78 நிமிடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா அணியினர் அடுத்த சில நிமிடங்களில் கவனக்குறைவாக செயல்பட்டனர். இதை சரியாக பயன்படுத்தி பிரான்சின் எம்பாப்பே அடித்த கோல்கள் அணிக்கு மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
90 நிமிடங்களுக்கு பின்னர் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதலாக 8 நிமிடங்கள் கொடுக்கப்பட்டும் கோல் விழவில்லை. இதன்பின்னர் முதல் 15 நிமிடங்கள் கூடுதலாக அணிகளுக்கு அளிக்கப்பட்டது. இதிலும் கோல் விழாத நிலையில் ஆட்டம் அடுத்த 15 நிமிடங்களுக்கு சென்றது.
இரண்டாவது 15 நிமிடத்தில் மெஸ்ஸியும், எம்பாப்பேவும் தங்களது அணிக்கு தலா ஒரு கோல்களை அடிக்க, கோப்பையை வெல்வது யார் என்பதை தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது.
பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் கோலை பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே அடித்து வைத்தார். அடுத்த கோலை அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி சர்வ சாதாரணமாக அடித்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…
2ஆவது ஷூட்டை பிரான்ஸ் வீரர் கொமன் அடிக்க முற்பட்டபோது அர்ஜென்டினா கோல் கீப்பர் எமி மார்ட்டின்ஸ் தடுத்து நிறுத்தினார். அர்ஜென்டினா தரப்பில் 2ஆவது ஷூட்டை டைபலா கோலாக்கியதால் ஆட்டம் 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா பக்கம் சாய்ந்தது.
3ஆவது ஷூட்டை பிரான்ஸ் வீரர் ஷோனமி தவறவிட, அர்ஜென்டினாவின் பாராரெஸ் அடித்த பந்து நேராக வலைக்குள் சென்றது. இப்போது 3-1 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
One of the best moments in history. pic.twitter.com/MGOq64G8qn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 18, 2022
4ஆவது ஷூட்டை பிரான்சின் கோலோ முவானி கோலாக்கி அணிக்கு நம்பிக்கையை ஏற்படுதினார். அதே நேரம் அர்ஜென்டினாவின் மோன்டீலும் கோல் அடித்ததை தொடர்ந்து, அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையை வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA World Cup 2022