ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? வல்லுனர்களின் ப்ரெடிக்சன்…

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? வல்லுனர்களின் ப்ரெடிக்சன்…

அர்ஜென்டினா - குரோஷியா

அர்ஜென்டினா - குரோஷியா

முதல் அரையிறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதும் நிலையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறித்து வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதுபற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று நள்ளிரவு 12.30-க்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் மோதின. இதிலிருந்து 16 அணிகள் அடுத்த பிரிவுக்கு தகுதிபெற்று நடந்த ஆட்டத்தில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுகல், இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெளியேறிய நிலையில், மொராக்கோ, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

உலகக்கோப்பை அரையிறுதியில் மோதும் குரோஷியா – அர்ஜென்டினா… நள்ளிரவில் தொடங்குகிறது போட்டி

இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

அர்ஜென்டினாவை பொருத்தளவில் தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் சுதாரித்து ஆடிய அர்ஜென்டினா அடுத்த போட்டியில் பலமிக்க மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வென்றது.

அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தினாலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா கடும் சவாலாக இருந்தது. ஹாலந்து அணியை பெனால்டி ஷூட்டில்தான் அர்ஜென்டினா தோற்கடித்தது.

இதன் அடிப்படையில் அர்ஜென்டினா சிறந்த ஃபார்மில் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

அர்ஜென்டினாவுடன் இன்று குரோஷியா அரையிறுதியில் மோதுகிறது. 2018-ல் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் குரோஷியா விளையாடி பிரான்சிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்த உலகக்கோப்பையை பொருத்தளவில், மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தது. கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வலிமை வாய்ந்த ஜப்பான், பிரேசில் அணிகளை பெனால்டி ஷூட்டில் வென்று தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அந்த வகையில் குரோஷியாவும் பந்தயம் அடிக்கும் அணியாக கருத முடியாது.

இன்று மோதும் இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால், பெனால்டி ஷூட் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நூலிழையில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

First published:

Tags: FIFA World Cup 2022