ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த கத்தார் எத்தனை லட்சம் கோடி செலவு செய்தது தெரியுமா?

உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த கத்தார் எத்தனை லட்சம் கோடி செலவு செய்தது தெரியுமா?

கத்தார் புதிய மைதானம்

கத்தார் புதிய மைதானம்

FIFA WORLD CUP 2022 | பிபா கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்த கத்தார் நாடு 220 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  32 நாடுகள் பங்கேற்கும் பிபா கால்பந்து உலக கோப்பையில் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கத்தார் நாடு இந்த கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்த மிக பிரமாண்டமாக செலவு செய்துள்ளது.

  ஆறு புதிய கால்பந்து மைதானங்கள் புதுப்பிக்கப்பட்ட பயிற்சி தளங்கள் என 10 பில்லியன் டாலரில் மிக பிரமாண்டமாக கட்டியுள்ளது.

  மீதமுள்ள சுமார் 210 பில்லியனில் விமான நிலையங்கள், புதிய சாலைகள், ஹோட்டல்களுடன் கூடிய புதுமையான மையங்கள் மற்றும் அதிநவீன நிலத்தடி போக்குவரத்து உள்ளிட்டவைக்கு செலவு செய்துள்ளதாக அமெரிக்க விளையாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான Front Office Sports தெரிவித்துள்ளது. தோஹாவில் மட்டும், தி பேர்ல் என்று அழைக்கப்படும் தங்குமிட வளாகத்திற்கு 15 பில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்டது மற்றும் தோஹா மெட்ரோவில் 36 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது.

  கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஏற்பாடு செய்ய ரஷ்யா 11.6 பில்லியன் டாலர் செலவு செய்தது. 2014ல் பிரேசில் 15 பில்லியனும், 2010ல் தென்னாப்பிரிக்கா 3.6 பில்லியனும் செலவிட்டதை ஒப்பிடுகையில் கத்தாரின் 220 பில்லியன் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. கத்தார் செலவு செய்த தொகை இந்திய மதிப்பில் 17 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.

  இதையும் படிங்க: என்னப்பா இது... வீடியோ கேம் பார்த்த மாறி இருக்கு.. சூர்யகுமார் இன்னிங்சை பாராட்டி தள்ளிய விராட் கோலி

  கத்தாரில் உள்ள எட்டு மைதானங்களில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பிஃபா தெரிவித்துள்ளது. 2018 உலகக் கோப்பையில் ரஷ்யா செலவு செய்த தொகை இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த உலக கோப்பை தொடரை ஓப்பிடும் போது கத்தார் உலக கோப்பை டிக்கெட் விலை 40 சதவீதம் அதிகம் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை 684 பவுண்டுகள் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ. 66,200 ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகளில் கத்தாரில் டிக்கெட் விலைகள் மிகவும் விலை அதிகம் என்றும் இறுதிப் போட்டிக்கான விலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 59 சதவீதம் அதிகம் என்று கெல்லர் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

  220 பில்லியன் டாலரை உலக கோப்பை தொடருக்கு செலவு செய்து கத்தர் நாடு இதனை ஒரு தொலை நோக்கு திட்டமாக தான் பார்த்து வருகிறது.உலகக் கோப்பை கத்தார் தேசிய தொலைநோக்கு 2030 இன் ஒரு பகுதி என்று ரஷ்யாவுக்கான கத்தார் தூதர் ஷேக் அகமது பின் நாசர் பின் ஜாசிம் அல் தானி கடந்த ஆண்டு ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar