ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA World Cup : ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பாகும் ஃபைனல் மேட்ச்… 100 மில்லியன் பார்வைகளை தாண்டும் என கணிப்பு…

FIFA World Cup : ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பாகும் ஃபைனல் மேட்ச்… 100 மில்லியன் பார்வைகளை தாண்டும் என கணிப்பு…

இன்றிரவு 8.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது

இன்றிரவு 8.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது

ரசிகர்களுக்கு சூப்பரான அனுபவத்தை தருவதற்காக ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு உளிட்ட மொழிகளில் கால்பந்தாட்ட போட்டிகள் வர்ணனை செய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தை ஜியோ சினிமா தளங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இதனை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் நேரடியாக பார்ப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி யுத்தம் இன்று இரவு களைகட்டவுள்ளது. போட்டி என்னமோ அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இருந்தாலும் மெஸ்ஸியா அல்லது எம்பாப்பேவா என ரசிகர்கள் மோத தயாராகியுள்ளனர்.

கால்பந்து விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் இன்று திருவிழா என்பதில் சந்தேகமே இல்லை. உலகின் உட்சபட்ச திருவிழாவின் கிளைமேக்ஸ் போட்டியான கத்தார் உலகக் கோப்பையின் இறுதி யுத்தம் இன்று நள்ளிரவு லூசாய்ல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.

கடந்த ஒரு மாதாமாக நடைபெற்றுவந்த கால்பந்து திருவிழாவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இறுதி யுத்தத்தில் போராடவுள்ளனர். ஆறாவது முறையாக இறுதி யுத்தத்தில் அர்ஜெண்டினா அணியும், நான்காவது முறையாக பிரான்ஸ் அணியும் மல்லுகட்டவுள்ளனர்.

இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

இந்த போட்டியை வழக்கம்போல ஜியோ சினிமா Jio Cinema தனது யூடியூப், வெப்சைட் மற்றும் ஆப்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இறுதியாட்டத்தை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் நேரலையாக பார்ப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட அனைத்து போட்டிகளுக்கும் ஜியோ சினிமா தளங்களில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. அதேபோன்று இன்றைய ஆட்டமும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH – குரோஷியா – மொராக்கோ கால்பந்தாட்ட போட்டியின் ஹைலைட்ஸ்…

யூடியூபில் Jio Cinema சேனல் மற்றும் jiocinema.com உள்ளிட்ட தளங்களில் இன்றைய இறுதிப்போட்டியை இலவசமாக பார்க்கலாம். ரசிகர்களுக்கு சூப்பரான அனுபவத்தை தருவதற்காக ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு உளிட்ட மொழிகளில் கால்பந்தாட்ட போட்டிகள் வர்ணனை செய்யப்படுகின்றன.

First published:

Tags: FIFA World Cup 2022