ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

"ஒன்லவ்".. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி செய்த காரியம்.. கடுப்பான கத்தார்.. விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்.!

"ஒன்லவ்".. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி செய்த காரியம்.. கடுப்பான கத்தார்.. விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்.!

ஜெர்மென் அணி

ஜெர்மென் அணி

ஜப்பானுக்கு எதிரான போட்டியின் போது, படத்திற்காக போஸ் கொடுத்த ஜெர்மனி வீரர்கள் ஒரு கையால் வாயை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaQatarQatar

  கத்தார் உலகக் கோப்பையில் தன் பாலின ஈர்ப்புக்கு ஆதரவாக போராடிய ஜெர்மனி அணிக்கு எதிராக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இஸ்லாமிய நாடான கத்தாரில் தன் பாலின ஈர்ப்புக்கு தடை உள்ளது. அங்கு நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் போது, ஐரோப்பாவைச் சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன்கள் "ஒன்லவ்" எனப்படும் LGBTQ சமூகத்தினருக்கு ஆதரவான பட்டையை கையில் அணிய விரும்பினர்.

  அதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஜப்பானுக்கு எதிரான போட்டியின் போது, படத்திற்காக போஸ் கொடுத்த ஜெர்மனி வீரர்கள் ஒரு கையால் வாயை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அது மட்டுமின்றி ஜெர்மென் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசரும், LGBTQ சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான ஆர்ம் பேண்டை, மறைத்து வைத்து மைதானத்திற்குள் கொண்டு வந்து அதனை வெளிகாட்டினார்.

  வேடிக்கை பார்க்க அழைப்பு.. பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய தாலிபான்

  இச்சம்பவத்தால், ஃபிஃபா உலக கோப்பை தனது முக்கிய ஸ்பான்ஸர்களில் ஒருவரை இழந்துள்ளது. மேலும் ஜெர்மெனி கால்பந்து வீரர்கள் மீது சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: FIFA World Cup 2022, LGBT, Qatar