Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து ஃபைனல் மேட்ச்சை ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்? விபரம் இதோ…

உலகக்கோப்பை கால்பந்து ஃபைனல் மேட்ச்சை ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்? விபரம் இதோ…

அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவையாக கருதப்படுவதால் இன்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கத்தார் நாட்டில் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அரையிறுதியில் குரோஷியாவை வென்று அர்ஜென்டினாவும், மொராக்கோவை தோற்கடித்து பிரான்சும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவையாக கருதப்படுவதால் இன்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரும்பாலான உலக நாடுகள் இந்தப் போட்டியை ஆர்வத்துடன் பார்க்கவுள்ளன.

இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

ஆன்லைனில் இந்தப் போட்டியை jiocinema.com தளத்தில் நேரடியாக பார்க்கலாம். இதேபோன்று Jio Cinema App –யில் நேரலையாக கால்பந்தாட்ட இறுதிப் போட்டி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஜியோ சினிமாவின் யூடியூப் சேனலிலும் இந்த போட்டி லைவாக ஒளிபரப்பாகும்.

இந்திய நேரப்படி இந்த போட்டி இன்றிரவு 8.30-க்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை ஜியோ சினிமா தளம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வர்ணனை செய்கிறது. இதனால் ரசிகர்கள் மிகச்சிறந்த அனுபவத்தை பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

FIFA World Cup : ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பாகும் ஃபைனல் மேட்ச்… 100 மில்லியன் பார்வைகளை தாண்டும் என கணிப்பு…

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட அனைத்து போட்டிகளுக்கும் ஜியோ சினிமா தளங்களில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. அதேபோன்று இன்றைய ஆட்டமும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஃபைனல் மேட்ச்சை பார்க்க விரும்புவோர் Jio Cinema செயலியை டவுன்லோட் செய்து கொள்வது பயன் அளிக்கும்.

First published:

Tags: FIFA World Cup 2022