முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி... பிரான்ஸ் - மொராக்கோ பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி... பிரான்ஸ் - மொராக்கோ பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?

பிரான்ஸ் - மொராக்கோ

பிரான்ஸ் - மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தப்போகும் அணிகள் என்னென்ன? அதன் பலம் மற்றும் பலவீனம் என்ன?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் விளையாடும் அணியை தீர்மானிப்பதற்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டி xநள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி - முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய் ஆப்ரிக்க அணியான மொராக்கோ-வுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி நட்சத்திர பட்டாளங்களுடன் அசுர பலத்தில் உள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் ஐந்து கோல்கள் அடித்த எம்பாப்வே, நான்கு கோல்கள் அடித்து அடுத்த இடத்தில் உள்ள ஜூருட் ஆகியோர் அங்கம் வகிப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

கோல்டன் ஃபூட் ரேசில் முன்கள ஆட்டக்காரர்கள் போட்டி போட, கோல்டன் கிளவ் ரேசில் கோல் கீப்பர் லாரியஸ் முன்னிலையில் உள்ளார். எதிரணியின் கோல் கிக்குகளை அசால்டாக தகர்த்தெறியும் லாரியஸை மீறி கோல் அடிப்பது சிரமமே.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஏழாவது முறையாக அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி களமாடுகிறது. இதில் முதல் மூன்றில் தோல்வியும், கடைசி மூன்றில் வெற்றியும் கண்டுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போலவே இம்முறையும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

மொராக்கோ அணியின் தடுப்பாட்டகாரர்கள் எதிரணி வீரர்களை கோல் பாக்ஸிற்குள் வருவதையே அனுமதிப்பில்லை. மொராக்கோ அணி, தனது தடுப்பரணைவைத்தே அரையிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. கோல் கீப்பர் யாசின் போவ்னோ (Bounou) அசுர பார்மில் இருப்பது எதிரணிக்கு சவால் அளிக்கிறது. யாரும் எதிர்பாராத நேரத்தில் சாதுர்யமாக கோல் அடிக்கும் வல்லமை படைத்துள்ள மொராக்கோ அதே ஃபார்முலாவோடு நடப்பு சாம்பியனை சந்திக்க காத்திருக்கிறது.

இரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் பிரான்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. உலகக் கோப்பையில் முதல் முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar