ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA WORLD CUP 2022 : காலிறுதி சுற்று இன்று ஆரம்பம்… அர்ஜென்டினா, பிரேசில் அரையிறுதிக்கு செல்லுமா?

FIFA WORLD CUP 2022 : காலிறுதி சுற்று இன்று ஆரம்பம்… அர்ஜென்டினா, பிரேசில் அரையிறுதிக்கு செல்லுமா?

காலிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன

காலிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன

முதல் ஆட்டத்தில் குரோஷியா பிரேசில் அணியையும், அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்து - அர்ஜென்டினாவையும் எதிர்கொள்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது. இதில் நட்சத்திர அணிகளான பிரேசிலும், அர்ஜென்டினாவும் அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதில் அர்ஜென்டினா அணி நெதர்லாந்தையும், பிரேசில் அணி குரோஷியாவையும் எதிர்கொள்கின்றன. இவ்விரு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதால், இன்றைய போட்டிகள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி கத்தார் நாட்டில் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்து 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இவற்றிலிருந்து 8 அணிகள் தற்போது காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.

2023 இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு... சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

16 அணிகள் இடம்பெற்ற இரண்டாவது சுற்றில், வலிமை வாய்ந்த சில அணிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியன. அந்த வகையில் ஸ்பெயின் அணியை அதிகம் கவனிக்கப்படாத மொராக்கோ அணி வெளியேற்றியது.

சுவிட்சர்லாந்தை போர்ச்சுக்கல் அணியும், தென்கொரியாவை பிரேசில் அணியும் வெளியேற்றின. ஆஸ்திரேலியாவை அர்ஜென்டினா அணி மிக எளிதாக ஊதித் தள்ளியது. இந்த போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி பலரது கவனத்தையும் கவர்ந்தார்.

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

வலுவான ஜப்பான் அணியை, குரோஷியா வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் கால் இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் குரோஷியா பிரேசில் அணியையும், அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்து - அர்ஜென்டினாவையும் எதிர்கொள்கின்றன.

நாளை நடைபெற உள்ள மற்றொரு காலிறுதியில், மொராக்கோ அணி போர்ச்சுக்கலை எதிர்கொள்கிறது. ஞாயிறன்று நடைபெறும் ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டம் இரவு 8.30-க்கும், அடுத்த ஆட்டம் நள்ளிரவு 12.30-க்கும் ஆரம்பம் ஆகிறது.

First published:

Tags: FIFA World Cup 2022