ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை அரையிறுதியில் மோதும் குரோஷியா – அர்ஜென்டினா… நள்ளிரவில் தொடங்குகிறது போட்டி

உலகக்கோப்பை அரையிறுதியில் மோதும் குரோஷியா – அர்ஜென்டினா… நள்ளிரவில் தொடங்குகிறது போட்டி

அர்ஜென்டினா - குரோஷியா

அர்ஜென்டினா - குரோஷியா

கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 எச்.டி.ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று நள்ளிரவு 12.30-க்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் மோதின. இதிலிருந்து 16 அணிகள் அடுத்த பிரிவுக்கு தகுதிபெற்று நடந்த ஆட்டத்தில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுகல், இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெளியேறிய நிலையில், மொராக்கோ, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

அர்ஜென்டினா ஏற்கனவே 2 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. ஆனால் 1986-ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த அணி கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை அணியின் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்ஸி இருப்பதால் சர்வதேச கால்பந்தாட்ட ரசிகர்களின் பார்வை அர்ஜென்டினா அணிப் பக்கம் திரும்பியுள்ளது.

கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 எச்.டி.ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

ஜியோ சினிமா (https://www.jiocinema.com/) என்ற இணைய தளத்தில் இலவசமாக போட்டியை கண்டு ரசிக்கலாம்.

கால்பந்து உலகக்கோப்பை: அர்ஜெண்டினா - குரோஷியா அணிகள் இடையே மோதல்.. களைகட்டும் அரையிறுதி!

அடுத்த அரையிறுதிப் போட்டி நாளை நள்ளிரவு 12.30-க்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வலிமை வாய்ந்த பிரான்ஸ் அணியை, முதன் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி எதிர்கொள்கிறது. மொராக்கோவிற்கு எதிராக எந்த அணியும் இதுவரை கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: FIFA World Cup 2022