ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கு!! பிபா உலகக் கோப்பை கால்பந்துக்கு தயாரான கத்தார்!

பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கு!! பிபா உலகக் கோப்பை கால்பந்துக்கு தயாரான கத்தார்!

உலக கோப்பைக்கு தயாரான கத்தார்

உலக கோப்பைக்கு தயாரான கத்தார்

FIFA World Cup | 22 ஆவது உலக கோப்பை கால்பந்து தொடரை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளுடன் கத்தார் தயராகி வருகிறது. உலக கால்பந்து ரசிகர்களை வரவேற்கவும் கத்தார் அரசு தயாராக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  22 ஆவது உலக கோப்பை கால்பந்து தொடரை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளுடன் கத்தார் தயாராகி வருகிறது. உலக கால்பந்து ரசிகர்களை வரவேற்கவும் கத்தார் அரசு தயாராக உள்ளது.உலக விளையாட்டு திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள். உலக கால்பந்து ரசிகர்களை இந்தப் போட்டிகளை கொண்டாடி தீர்ப்பது வழக்கம். அந்த வகையில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ளன. இதற்காக கத்தார் முழுமையான முன்னேற்பாடுகளுடன் தயாராக உள்ளது.

  கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதிருந்தே கத்தார் அரசு இதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் நாட்டை செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் கத்தாரும் கலந்து கொண்டது.பலத்த போட்டிகளுக்கிடையே இந்த வாய்ப்பை பெற்றது கத்தார்.

  உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கத்தார் அரசு முழுவீச்சுடன் நிறைவேற்றயதாக கூறுகிறார் 2022 ஃபிபா உலக கோப்பை போட்டியின் முதன்மை செயல் அலுவலர் நாசர் அல் காதர்.உலக கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், அதை கத்தார் அரசு நடத்துவது நெகிழ்ச்சியானது என்றும் குறிப்பிட்டுள்ளார் நாசர் அல்  காதர். ஏலத்தில் வென்று உலக கோப்பை நடத்தும் வாய்ப்பை பெற்ற உடனே அதற்கான கட்டமைப்பு வேலைகளை தொடங்கியது கத்தார் அரசு.

  Read More : 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து: இலவசமாக ஜியோவில் பார்க்கலாம்.. முழு விவரம் இங்கே!

  ஏறத்தாழ 500 கோடி அமெரிக்க டாலர் செலவில் தற்போது ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட தயாராக உள்ளன. உலகத் தரத்திலான எட்டு மைதானங்களை கட்டமைத்துள்ளது கத்தார் அரசு. அதோடு போட்டிகள் நடைபெறும் நகரங்களுக்கிடையே ரசிகர்கள் எளிதாக சென்றுவர பிரத்யேக மெட்ரோ ரயில் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ரசிகர்கள், வீரர்கள், அலுவலர்கள் என வெளிநாட்டினர் தங்குவதற்கான ஏற்பாடுகள், உட்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்து தயாராக உள்ளது கத்தார்.

  உலகின் முன்னணியில் இருக்கும 32 அணிகள் மோதும் உலக கோப்பையின் முதல் போட்டி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பைத் மைதானத்தில் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் கத்தார் அணியும் ஈக்வடார் அணியும் மோத உள்ளன. 64 போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 12 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

  மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறும் இந்த உலக் கோப்பைக்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. உலக கோப்பை வரலாற்றிலேயே இந்த உலக கோப்பை தான் குளிர்காலத்தில் நடைபெறுகிறது. 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக உலக நாடுகளின் கண்கள் கத்தாரை நோக்கி திரும்பியுள்ளன.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: FIFA, FIFA World Cup, Football