ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கத்தார் கால்பந்து உலக கோப்பையில் வழங்கப்படும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தொகையை கேட்டு வாய் பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்?

கத்தார் கால்பந்து உலக கோப்பையில் வழங்கப்படும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தொகையை கேட்டு வாய் பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்?

கால்பந்து உலக கோப்பை 2022

கால்பந்து உலக கோப்பை 2022

20ஆம் தேதி கத்தாரில் நடைபெறும் பிபா கால்பந்து உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு தொகை மதிப்பு குறித்து பிபா அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மொத்த பரிசு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி அனைவரையும் மலைக்க வைத்துள்ளது.

  மனிதர்கள் வாழ்வில் எப்படி சினிமா  ஒன்றிணைந்துள்ளதோ அது போல விளையாட்டும் இணை பிரியாமல் மக்களுடன் பின்னி பினைந்துள்ளது. உலகின் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் போட்டி என்றால் அது கால்பந்து விளையாட்டு தான். இந்தியாவில் இந்த போட்டிக்கு வரவேற்பு அதிகளவில் இல்லாவிட்டாலும் உலக அளவில் கால்பந்து போட்டிக்கு என்றும் மதிப்பு அதிகம்.

  பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் என்பது சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

  22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரில் முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

  மலைக்க வைக்கும் பரிசு தொகை:

  உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்த பரிசு தொகையாக பிபா அறிவித்துள்ளது.அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3586 கோடியாகும்.

  கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றபோது மொத்த பரிசு தொகை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3258 கோடியாகும். தற்போது 40 மில்லியன் டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: பிராவோ விடுவிப்பு ; ஜடேஜா தக்கவைப்பு - சிஎஸ்கே பட்டியலின் முழு விபரம்!

  எந்த அணிக்கு எவ்வளோ பரிசு தொகை:

  2022 பிபா கால்பந்து உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்று வாகைசூடும் அணிக்கு  இந்திய மதிப்பில் 344 கோடி ரூபாய் முதல் பரிசாக பிபா வழங்கவுள்ளது. இறுதிப்போட்டியில் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு  இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 3வது இடம் பிடிக்கும் அணிக்கு $27 மில்லியன், இந்திய மதிப்பில் 220 கோடி ரூபாய் வழங்கப்படும்.

  4-வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாய் வழங்கப்படும். அதேபோல் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் இந்திய மதிப்பில் தலா 138 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.

  இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு $38 மில்லியன் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 4 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கப்பட்டு வாகை சூடும் அணிக்கு 42 மில்லியனாக வழங்கப்படுகிறது.

  அதுமட்டும் இல்லாமல் அடுத்தாண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடருக்கு பிபா 60 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகையாக அறிவித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடருடன் ஒப்பீடும்பொது இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

  இந்த நிலையில் தற்போது கத்தாரில் நடைபெறும் ஆண்கள் கால்பந்து உலக கோப்பை பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசு தொகை 100 மில்லியன் டாலராக உயர்த்த பிபா அமைப்பு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: FIFA, FIFA World Cup