ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA WORLD CUP 2022 : காலிறுதியில் மோதும் அர்ஜென்டினா – நெதர்லாந்து… வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம்?

FIFA WORLD CUP 2022 : காலிறுதியில் மோதும் அர்ஜென்டினா – நெதர்லாந்து… வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம்?

நெதர்லாந்து - அர்ஜென்டினா

நெதர்லாந்து - அர்ஜென்டினா

நெதர்லாந்து அணியில் கோடி காக்போ முக்கியமான ஆட்டக்காரராக கருதப்படுகிறார். இந்த தொடரில் அவர் ஹாட்ரிக் கோலை பதிவு செய்திருக்கிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெறும் கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி - நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.

அர்ஜென்டினாவை பொருத்தவரையில் 10ஆவது முறையாக உலக கோப்பை காலிறுதி சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற்றிருக்கிறது. நெதர்லாந்து 7ஆவது முறையாக உலக கோப்பை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடர் ஆரம்பித்தபோது, பலவீனமான அணியாக கருதப்படும் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி, தற்போது காலிறுதிக்கு அந்த அணி தகுதி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், இந்த உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி, எந்த ஒரு அணியிடமும் இதுவரை தோல்வி அடையவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி சற்று வலிமையாக இருந்தாலும் கூட, நெதர்லாந்து வீரர்கள் மன ரீதியில் பலம் வாய்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

FIFA WORLD CUP 2022 : காலிறுதி சுற்று இன்று ஆரம்பம்… அர்ஜென்டினா, பிரேசில் அரையிறுதிக்கு செல்லுமா?

அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியின் எதிர்கொள்ள நெதர்லாந்தின் டிஃபெண்டர் ஆட்டக்காரர்களான ஜூரியன் டிம்பர் மற்றும் நாதன் ஏகே ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மெஸ்ஸியை எதிர்கொள்ள நெதர்லாந்து சில வியூகங்களையும் வகுத்திருக்கிறது.

நெதர்லாந்து அணியில் கோடி காக்போ முக்கியமான ஆட்டக்காரராக கருதப்படுகிறார். இந்த தொடரில் அவர் ஹாட்ரிக் கோலை பதிவு செய்திருக்கிறார். இந்த காலிறுதி ஆட்டம் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு, கத்தாரின் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

2023 இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு... சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 எச்டி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதேபோன்று ஜியோ சினிமா ஆப்பில் உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரை இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த கால் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெல்லும் என்று, பல்வேறு கால்பந்தாட்ட நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

First published:

Tags: FIFA World Cup 2022