முகப்பு /செய்தி /விளையாட்டு / கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டம்.. வெற்றிப் பாதைக்கு திரும்பிய அர்ஜென்டினா அணி

கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டம்.. வெற்றிப் பாதைக்கு திரும்பிய அர்ஜென்டினா அணி

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

FIFA World Cup: மெக்சிகோ அணிக்கு எதிரான குரூப் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி அணிக்கு முதல் வெற்றியை தேடித்தந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaDohaDohaDoha

2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் பிரிவு போட்டியில் அர்ஜெண்டினா அணி மெக்சிகோ அணியுடன் மோதியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார்.

குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி மெக்சிகோ அணியுடன் மோதியது.கால்பந்து உலகின் ஜாம்பவானாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி இதுவரை சாதிக்காத ஒரு மைல்கல் என்றால் அது உலகக் கோப்பை வெற்றி மட்டுமே. அர்ஜெண்டினா அணிக்காக உலகக் கோப்பை வெல்வது என்பது மெஸ்ஸிக்கு எட்டாத கனவாக இதுவரை இருந்து வரும் நிலையில், 2022 கத்தார் உலகக் கோப்பை தான் தனது கடைசி உலகக் கோப்பை என்று அறிவித்து தொடருக்குள் நுழைந்தார் மெஸ்ஸி.

எனவே, இந்த உலகக் கோப்பையில் தனது முழு திறமையையும் காட்டி கோப்பையை வெல்வது என்ற உத்வேகத்தில் உள்ளார் மெஸ்ஸி. இவ்வாறு பெரும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் இருந்த மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணி ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தனது முதல் போட்டியில் கத்துக்குட்டி அணியான சவுதி அரேபியாவுடன் மோதிய அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் அர்ஜெண்டினா களமிறங்கியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா வீரர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் அது கோலாக பலன் அளிக்கவில்லை. இருப்பினும் இரண்டாவது பாதியில் மெஸ்ஸி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெக்ஸிகோ வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் பலனாக ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மெஸ்ஸி சிறப்பான கோல் ஒன்றை கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது. பின்னர் 87வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது சக வீரரான பெர்னான்டெசுக்கு சிறப்பான அஸிஸ்ட் கொடுத்து அதை பெர்னான்டெஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: நீங்கள் பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியா வர மாட்டோம் - பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் அதிரடி

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கிய அர்ஜெண்டினா அணியை காக்கும் விதமாக இரண்டு கோல்களிலும் பங்களித்த மெஸ்ஸி அணிக்கு மீண்டும் உத்வேகத்தை தந்துள்ளார். அர்ஜெண்டினா அணி வரும் டிசம்பர் 1ஆம் தேதி தனது அடுத்த குரூப் போட்டியில் போலாந்து அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022, Mexico