ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர்: போலந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர்: போலந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்

பிரான்ஸ் - போலாந்து

பிரான்ஸ் - போலாந்து

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறவுள்ள நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, போலந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து - செனெகல் அணிகள் மோதவுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று இரவு 8.30 மணிக்கு அல் துமாமா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் - போலந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பிரான்ஸ் அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. அத்துடன், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணியை பொறுத்தவரை போக்பா, கண்டே, பென்ஸெமா, போன்ற அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் விலகினாலும் இளம் வீரர் எம்பாப்பே அதிரடியால் பிரான்ஸ் அணி முதல் அணியாக நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. உலகின் மதிப்புமிக்க வீரரான மாப்பே நடப்பு தொடரில் 3 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் நீடிக்கிறார்.

போலந்து அணியை பொறுத்தவரை 36 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு நாக் அவுட் சுற்றில் போலந்து விளையாடவுள்ளது. உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் போலந்து, 1982ல் 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸை பந்தாடியது. இவ்விரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ளதில் 8ல் பிரான்ஸ்-ம், 3ல் போலந்தும் வெற்றி பெற்றுள்ளன.

இதையும் படிங்க: Ind vs Ban | சொதப்பிய டாப் ஆர்டர் பேட்டிங்; தனி ஆளாக போராடிய கே.எல.ராகுல்.. வங்கதேச அணிக்கு எளிய இலக்கு

 

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதவுள்ளன. பயிற்சியாளர் சிஸ்ஸேe 2002ம் ஆண்டு செனகல் கேப்டனாக இருந்து பிறகு பயிற்சியாளராக மாறி அணியை நாக் அவுட் வரை அழைத்துவந்துள்ளார்.

ஈக்வடார், கத்தாரை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய செனகல் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளிக்க காத்திருக்கிறது. மூன்றாவது முறை உலகக் கோப்பையில் களமாடும் செனகல் 2002ம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 16 வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து ஒன்பது முறை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஹேரி கேன், சாகா, ரேஸ்போர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கொண்டு லீக் சுற்றில் ஒன்பது கோல்களை பதிவு செய்துள்ள இங்கிலாந்து நாக் அவுட் சுற்றிலும் கோல் மழை பொழிய காத்திருக்கிறது.

First published:

Tags: FIFA World Cup 2022