ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து : நாக் அவுட்டில் எந்த அணிகள் முன்னேறின? யார் யாருடன் மோதல்? - முழு விவரம்

உலகக்கோப்பை கால்பந்து : நாக் அவுட்டில் எந்த அணிகள் முன்னேறின? யார் யாருடன் மோதல்? - முழு விவரம்

fifa world cup 2022

fifa world cup 2022

எட்டு போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதப்போகும் அணிகள் குறித்து அறியலாம். கத்தாரில் கொண்டாடப்படும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின.

லீக் சுற்றுகள் மூலம் 16 அணிகள் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மோதவுள்ள அணிகள் விவரம்:

நெதர்லாந்து அமெரிக்கா
அர்ஜென்டினா ஆஸ்திரேலியா
ஜப்பான் குரேஷியா
பிரேசில்  தென் கொரியா
பிரான்ஸ் போலந்து
இங்கிலாந்து  செனெகல்
மொராக்கோஸ்பெயின்
போர்சுகல் சுவிட்சர்லாந்து

என எட்டு போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.

இதையும் படிங்க: கால்பந்து போட்டியால் கல்லா கட்டும் ‘பப்’ உரிமையாளர்கள்!

நடப்பு சாம்பியனாக அங்கம் வகிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. இதே போல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியம், முதல் சாம்பியன் உருகுவே உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின.

First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Qatar