ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒரே போட்டி.. பல சாதனைகள்.. ஐரோப்பிய நாடுகளின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜெண்டினா!!

ஒரே போட்டி.. பல சாதனைகள்.. ஐரோப்பிய நாடுகளின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜெண்டினா!!

உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா வீரர்கள்

உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா வீரர்கள்

மொத்தம் 26 போட்டிகளில் விளையாடி அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaDohaDoha

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது.பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது.

இரு அணிகளும் ரெகுலர் டைம்யில் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமனில் இருந்தன. பின்னர், நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.போட்டியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அதேவேளை, அர்ஜெண்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி அபாரமாக ஆடி இரு கோல்களை அடித்து தனது உலகக் கோப்பை கனவை நனவாக்கினார்.

இந்த இறுதிப்போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளன

  • இறுதிப்போட்டியில் கோல் அடிதத்தன் மூலம் ஒரே உலகக் கோப்பையில் ரவுன்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த வீரர் என்ற முதல் வீரர் பெருமையை பெற்றார் மெஸ்ஸி.
  • 2002ஆம் ஆண்டு தென்னமெரிக்க நாடான பிரேசில் உலகக் கோப்பையை வென்றது. அதற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பைகளிலும் ஐரோப்பிய அணிகளே சாம்பியன் பட்டம் வென்றன. 20 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டினா ஐரோப்பாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
  • மொத்தம் 26 போட்டிகளில் விளையாடி அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

இதையும் படிங்க: WATCH - சோகத்தில் தவித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.. மைதானத்துக்கே வந்து ஆறுதல் கூறிய அதிபர் மேக்ரான்.. வீடியோ!

  • அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியிலேயே சவுதி அரேபியா அணியிடம் தோல்வி அடைந்தது. அங்கிருந்து மீண்டு எழுந்து கோப்பையை வென்றது. 2010லும் ஸ்பெயின் அணி இதுபோல் முதல் போட்டியில் தோற்று பின்னர் சாம்பியன் ஆனது.
  • 1962க்குப் பின் எந்த அணியும் தொடர்ந்து இரு முறை உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த முறை சாம்பியனாகி இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் இந்த வாய்ப்பை நுலிழையில் தவறவிட்டது.
  • உலகக்கோப்பை இறுதிப்போட்டி பெனால்டி முறையில் முடிவை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

First published:

Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup 2022, France, Record